மறுஆய்வு

மறுஆய்வு WORDPRESS இல் இருந்து .COM க்கு மாற்றம்
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக WWW.MARUAAIVU.WORDPRESS.COM இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் மறுஆய்வு இனி வரும் காலத்தில் WWW.MARUAAIVU.COM இலேயே மறுஆய்வுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மறுஆய்வு.கொம் ( WWW.MARUAAIVU.COM ) இயங்கத்தொடங்கிவிட்டது.

http://www.maruaaivu.com/

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா
அமெரிக்க அரசுக்கு தெரிந்த ஒரு உண்மை, பொது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றது. லிபியாவில் இடம்பெற்றது மக்கள் எழுச்சி அல்ல. மாறாக கடாபி அரசுக்கு எதிரான அல்கைதாவின் கிளர்ச்சி. ஏற்கனவே தொன்னூறுகளில் இதே கிழக்கு லிபிய பிரதேசத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய- மத அடிப்படைவாத சக்திகளின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. இன்று கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரமும், அதன் சுற்று வட்டாரமும் அல்கைதா விசுவாசிகளைக் கொண்டது. ஈராக்கில் இஸ்லாமிய அரசமைக்கும் நோக்குடன் அனுப்பப்பட்ட லிபிய அல்கைதா உறுப்பினர்கள், இதே கிழக்கு லிபிய பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர், ஊர், பற்றிய விபரங்கள் ஏற்கனவே அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் உள்ளன. லிபியாவில் அல்கைதா கிளர்ச்சியை பாதுகாப்பதற்காக, நேட்டோ படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பிரான்ஸ் உட்பட சில மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, “இடைக்கால அரசில்” அங்கம் வகிக்கும் அரைவாசிப் பேர் அல்கைதாவுடன் தொடர்புடைவர்கள். இவர்களது பெயர் விபரங்கள் “பாதுகாப்பு காரணங்களுக்காக” இன்னும் அறிவிக்கப் படவில்லை.

அக்டோபர் 2007, ஈராக்கில் சிரிய எல்லையோர நகரமான Sinjar ரில், அமெரிக்க படைகளின் இராணுவ நடவடிக்கையின் போது பல முக்கிய ஆவணங்கள் அகப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த West Point Military Academy அந்த ஆவணங்களை ஆராய்ந்தது. ஈராக்கிற்கு எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்கைதாவினால் திரட்டப்பட்டனர், அவர்களின் ஊர், பெயர் விபரங்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன. அதிகமான போராளிகள் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த இடத்தில் லிபியாவைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக டார்ணா நகரைச் சேர்ந்த போராளிகளே அதிகம். பெங்காசிக்கும், தொவ்றுக் நகருக்கும் நடுவில் அமைந்துள்ள டார்ணா வெறும் எண்பதாயிரம் மக்கட்தொகையைக் கொண்டது. அந்த ஊரைச் சேர்ந்த 52 பேரது விபரங்கள் அந்த ஆவணத்தில் காணப்படுகின்றன. இன்று கிளர்ச்சிக் குழுக்களின் “சுதந்திர லிபியாவின் தலைநகரமான” பெங்காசியில் இருந்து 21 போராளிகள் சென்றுள்ளனர். ( West Point Military அகாடமி வெளியிட்ட அறிக்கையின் PDF கோப்பு இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது)

மேற்கத்திய தலையீட்டையும், நேட்டோ படைகளினால் லிபியா விடுதலை விடுதலை செய்யப் படுவதையும் கிளர்ச்சியாளர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. கடும்போக்கு இஸ்லாமியவாதிகளான அவர்கள், அமெரிக்கர்களை கொல்வதற்காக ஈராக் சென்றவர்கள். தங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் ஆதரவை இழந்து விடும் அச்சம் காரணமாக மறுத்து விட்டார்கள். இருப்பினும் மக்கள் எழுச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே, எகிப்திய இராணுவ அரசு ஆயுதங்களை அனுப்பி வைத்தது. (Egypt Said to Arm Libya Rebels, Wall Street Journal, March 17, 2011″) கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுமாறு, ஒபாமா சவூதி அரேபியாவை கேட்டுக் கொண்டார். (“America’s secret plan to arm Libya’s rebels,” Independent, Mach 7, 2011 )

லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக Libyan Islamic Fighting Group (LIFG) என்ற தலைமறைவு அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. 2007 ம் ஆண்டு, ஈராக்கில் அல்கைதா தொடர்பின் பின்னர் அது தனது பெயரை Al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்று மாற்றிக் கொண்டது.

Libyan rebel commander admits his fighters have al-Qaeda links

புளாட்டில் நான் பகுதி – 12
மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும்

தோழர் தங்கராஜாவை எம்மிடமிருந்து பிரித்தனர். அவரை முகாம் பொறுப்பாளர்களுடன் தனியாக களஞ்சியசாலையில் தங்க வைத்தனர். அன்று பகல், பாதி மயக்கத்துடனும் உடல் உபாதைகளுடனும் நாம் எல்லோரும் அவதிப்பட்டோம். இரவானதும், மீண்டும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. அன்றிரவு வாமதேவன், செந்தில், பாபுஜி, மாணிக்கதாசன் இன்னும் இருவர் வந்தனர். வந்தவர்களோ, எம்மை வெளியே வரும்படி கத்தினர். நாங்களோ நடக்க முடியாமல் இருந்ததால், அரக்கி அரக்கி வெளியே சென்றோம். மீண்டும் அடிக்க ஆரம்பித்தனர். வந்தவர்கள் எம்மை மனிதர்களாகவே நினைக்கவில்லை. ஏன் மிருகங்களுக்குக் கூட அன்பு காட்டியிருப்பார்கள் ஆனால் அவர்கள் எம்மை வெறுக்கத்தக்க துரோகக் கும்பலாகவே கணித்தார்கள். அதற்கேற்றாற் போல் ஈவு இரக்கமின்றி எம்மை நடத்தினர். மக்கள் அமைப்பு என்றார்கள், மக்களுக்கான விடுதலை என்றார்கள், மாணவர்களை அணிதிரட்டினார்கள். ஆனால் அதற்காக புறப்பட்டவர்களை கொல்லவும் செய்தார்கள். இதுதான் இவர்களின் விடுதலைப் போராட்டமாகவும் இருந்தது.
என்னை ஒருவன் அடிக்க ஆரம்பித்தது மட்டுமே நினைவிலுள்ளது. எனக்கு நினைவு வந்த நேரத்தில், அந்த முகாமின் சமையல் சாலைக்கு அருகில் படுத்திருந்தேன். என்னருகில் இரு தோழர்கள் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாமதேவன் என்று நினைக்கின்றேன் “இவன் முளிச்சிட்டானா” என்று அவர்களை நோக்கி கேட்க, அதில் ஒருவர் இல்லை என ஆரம்பிப்பதற்கு முதல் மற்றவர் தவறுதலாக ஆம் என்று விட்டார். உடனே வாமதேவன் இல்லை என்ற தோழரை அதட்டி, என்ன “இவனை காப்பாற்றப் பாக்கிறியா” என கேட்டபடி அங்கு வந்து என்னை இழுத்து அடிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றான். அங்கு முதல் நாள் இரவு எமக்கு அடிக்கும் போது காவல் கடமையில் பணிபுரிந்தவர்களே அன்றும் பணிபுரிந்தார்கள். அவர்களில் மனநிலை பாதிக்கப்பட்ட அந்தத் தோழரும் ஒருவர். அவரிடம் தடியை (கொட்டானை) கொடுத்து, எம்மை அடிக்கும் படி கூறுகையில் அவர் அடிப்பதற்கு பதிலாக அலறியபடி அவ்விடத்தை விட்டு வெளியேறினார். அவ்வாறு வெளியேறியவரை விட்டார்களா என்ன(?), மீண்டும் அழைத்து வந்து பயம் தீரவேண்டும் எனக்கூறி எம்முன் நிறுத்தினார்கள். அந்தத் தோழர் முற்று முழுதாக அன்றிரவுடன் தன் சுயபுத்தியை இழந்தார். காவலுக்கு நின்றவர்களை ஒருசிலரிடம் எமக்கு அடிக்கும்படி கூறி, அதற்கு விளக்கத்தை செந்தில் “உங்களிடம் எதிரி சிக்கினால் அவனிடம் பரிதாபம் காட்டாது தண்டிப்பதற்கு இதுவும் ஒரு பயிற்சி” என்றான். அவர்களோ எமக்கு அடிப்பதற்கு விரும்பாதவர்களாயினும், அவர்களின் கட்டளைக்கு இணங்க அடித்தார்கள். ஒரு சில முகாம் தோழர்களிடம் நாம் இயக்கத்தை அழிக்க வந்தவர்கள் என்ற பார்வையும் இருந்தது. இவர்களின் அடிக்கு பின்பு, எமக்கு அடிப்பதற்காக மாணிக்கதாசனுடன் வந்த அந்த ஆறுபேரும் அடித்தார்கள். அப்போது தான் விஜியின் கழுத்தில் மாணிக்கதாசன் அடித்தான். அதனால் அவரின் கழுத்திற்கும் தோள்பட்டைக்கும் இடையிலான எலும்பில் வெடிப்பு ஏற்பட்டது.

என்னை வாமதேவனும் பாபுஜியும் இணைந்து அடித்தது தான், நினைவில் நிற்கின்றது. நான் கண்விழித்த போது பகற்பொழுதாகி இருந்தது. நான் குறண்டியபடி மற்றவர்களோடு கும்பலாகக் கிடந்தேன். அன்றைய பகற்பொழுது பாதி மயக்கத்துடன் சென்றது. அன்று என்னை சிறுநீர் கழிக்க அழைத்துச் சென்ற தோழர்களில் ஒருவர், என்னைப் பார்த்து இது தேவைதானா உங்களுக்கு என வினாவ முற்பட்டார். அதன் போது மற்றவர் “இவர்களுடன் கதைக்க வேண்டாம், கதைத்தால் எங்களுக்கும் இதுதான் கதி” என்றார். அன்று பகல் நான் உணவு உண்டதாக நினைவில் இல்லை. இரவு மீண்டும் அதே மோட்டார் சைக்கிள் சத்தங்கள். அன்று மாணிக்கதாசன் வரவில்லை. அவருக்குப் பதிலாக சசி என்பவர் வத்திருந்தார். வந்தவர்கள் மீண்டும் மீண்டும் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்.

மறுநாள் மதியம் அளவில் மீண்டும் மோட்டார்ச் சைக்கிள் சத்தம் கேட்டது. எனக்கோ அதைக் கேட்டதும் மலம் சலம் தானாகவே வர ஆரம்பித்தது.  மாணிக்கதாசனும் வாமதேவனும் வந்தார்கள். எங்கள் மீதான விசாரணை நடத்தப் போவதாக கூறி “நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்கள் வாக்குமூலத்தை தனித்தனியே எழுதித் தரவேண்டும்” எனக் கூறினார்கள். நாம் அரை மயக்கத்தில் இருந்ததால், நாம் அவர்களிடம் என்ன கூறினோம் என்று எதுவும் எமக்குத் தெரியாது. சிறிது நேரத்தால் அவர்கள் சென்றுவிட்டனர். அன்றிரவு; இரவு மீண்டும் மோட்டார் சைக்கிள் வருகைச் சத்தம் கேட்டதுமே, மலசலம் எனது சுயகட்டுப்பாடின்றி வெளிவருவது போல இருந்தது. நான் என்னை காவல் காக்கும் கடமையில் உள்ளவர்களிடம், எனது நிலையைக் கூறினேன். அதற்கு அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் அனுமதி கிடைத்த பின்பே, அழைத்துச் செல்லலாம் என் கூறினார்கள். அவர்களிடம் அதற்கான அனுமதியை எவ்வாறு கேட்பது? அவர்கள் இங்கு வருவதே எம்மை துன்புறுத்துவதற்காகவே. அவர்களுக்கு எனது நிலை நகைப்பிற்கிடமான ஒன்றே ஒழிய, வேறோன்றும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
வந்ததும் வெளியில் வரும்படி சத்தமிட்டு கத்துவார்கள். நாமே பயந்து பயந்து செல்வோம். அதிலும் நான் நடக்கமாட்டேன். எனவே அரைந்து அரைந்து தான் செல்வேன். இதனால் எனக்கு முதல் அடி முதுகில் தான் விழும். வழமை போல “வெளியால வாங்கடா” என கத்தினார்கள். அன்று என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. அரைந்து இரைந்து அவர்களை நோக்கிச் சென்றேன். அதனால் முதல் அடி முதுகில் விழுந்தது. அவ்வாறே விழ மீண்டும் அலறல். அன்று அடிவிழும் நேரம் சற்றுக் குறைந்திருந்தது.
வழமை போல எமது அலறல்களும் கதறல்களும், அந்த முகாமை தன் வசப்படுத்தியது. அவர்களின் தாக்குதலின் உக்கிரமும், சித்திரவதையின் கொடூரமும் குறைந்ததாகத் தெரியவில்லை. எமது கண்ணீரும் கதறலும் அவ்விரணியர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் இன்று வழமையான மூன்று மணித்தியால துன்புறுத்தலுக்கு பதிலாக, இரண்டு மணித்தியாலத்தில் நிறுத்திக் கொண்டனர்.
வாமதேவனும் பாபுஜியும் நாளை காலை வருவோம், எமது வாக்குமூலம் எழுதி முடித்திருக்க வேண்டும் என்று கூறிச் சென்றனர். அதே போன்று மறுநாள். அதாவது ஐந்தாவது நாள். செந்தில் வாமதேவன் போன்றோர் வந்தனர். வந்தவர்கள் “எழுதிவிட்டீர்களா” எனக் கேட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் எம்மால் எழுந்து உட்காரவே முடியாத நிலையில், ஒவ்வொருவரும் சுருண்டு கிடக்கும் வேளையில் எழுதிவிட்டீர்களா என்று கேட்டால் என்ன பதில் கூறுவது? இல்லை என்றோம். உடனே ஒரு உதை. சசி என்பவர், எம்மீதான காவல் கடமைக்கு பொறுப்பாளியாக அன்றிலிருந்து நியமிக்கப்பட்டிருந்தார். சசியிடமே எமது வாக்குமூலத்தை பதிவு செய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்காக சசி முகாமில் இருந்த வேறோரு தோழரை நியமித்தார்.  குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதை முடிக்குமாறு உத்தரவிட்டதுடன், குறித்த ஒரு நேரத்தையும் அத்தோழருக்கு குறிப்பிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்த தோழர், எமது நிலையைப் பார்த்து விட்டு வாக்குமூலம் எடுக்காது சசியிடம் சென்று தன்னால் எடுக்க முடியவில்லை எனக் கூறி இருக்க வேண்டும். சசி வந்து எம்மைப் பார்த்தார். நாமோ மிகுந்த வேதனையுடன் அங்கிருப்பதைக் கண்டு திரும்பிச் சென்றார்.

அன்று இரவு எவரும் வரவில்லை ஆனால் நாமும் நித்திரை கொள்ளவில்லை. எந்த நேரத்திலும் எம்மை வந்து தாக்கலாம் என்ற பயத்தில், இரவு முழுவதும் கழிந்தது.

எனக்கு மனநிலைத் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும். இது பிற்காலத்தில் வெகுவாக என்னைப் பாதித்தது. இது தொடர்பாகவும் மற்றைய தோழர்களின் மனநிலை தொடர்பாகவும் வரும் தொடர்களில் கூறுவேன்.
போராட்டம் என்பது மக்களுக்கானதாக இருக்கவில்லை. மாறாக தம்மையும், தமது அதிகார இருப்பையும் பாதுகாத்துக் கொள்வதே, மத்திய குழு உறுப்பினர்களின் குறிக்கோளாக இருந்தது. அதனாலேயே தம்மை மாற்று இயக்கங்களாலும், இலங்கை அரசாலும், ஏன் அமைப்பினாலும் யாராவது வந்து உளவு அறிந்துவிடுவார்களோ என்ற பயத்தாலும் பீதியாலும், முட்டாள்தனமான அரசியலாலும், அன்றைய மத்திய குழு சீரழிந்து இருந்தது. இதன் நிமித்தமே உட்படுகொலைகள் சர்வசாதாரணமாக நடந்தேறியது. புளட்டின் மத்திய குழுவினர் தமது கழகத் தோழர்களுடன் எந்த வகையில் மிருகத்தனமாக இருந்தார்கள் என்பதைவிட, இவர்கள் தான் மற்றைய இயக்கங்களுக்கும் உட்படுகொலை சித்திரவதை செய்யலாம் என வழிகாட்டியவர்களும் கூட. தமிழ் சமுதாயத்தில் உள்ள அனைத்து பிற்போக்குத்தனங்களையும் தலைமையில் கொண்டிருந்த இயக்கமே புளட் எனலாம்.

”நிழல் தேசியத்தலைவர்”ரூட் ரவிக்கு பிரித்தானிய அப்பாவி மாணவனின் மடல்:
தமிழீழ பயணத்தில் பயணிக்க ஆர்வமாய் காத்திருக்கும் என் சந்ததியின் அன்பான வேண்டுகோள்

அன்பின் ரவி அண்ணா ,

உங்களை எனக்கு சிலகாலமாகவே நேரில் கண்டு பழக்கம் என்றாலும் ரூட் ரவி என்று பலகாலமாகவே உங்கள் சேவையை கண்டு , நீங்கள் எனது மடலின் உள்ளார்ந்த வேதனையை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை வரைகிறேன். உங்கள் சேவையால் நீங்கள் எங்கள் மத்தியில் ஒரு தலைவராக நிமிர்ந்து நிற்பது உங்கள் மீது நாங்கள் அதுவும் உங்களை அடுத்து இந்த தமிழீழ பயணத்தில் பயணிக்க ஆர்வமாய் காத்திருக்கும் என் சந்ததியே உங்களை பார்த்து நிற்பது உங்கள் தலைமைத்துவத்துக்கு கிடைத்த ஒரு வெற்றியே.

அதனால் இந்த நாடு கடந்த‌ தமிழீழ அரசை பிரதானிய தமிழர் பேரவைக்கு இணையான முற்றும் முழுதான ராஜதந்திர ரீதியிலான அரசியல் செய்யும் அமைப்பாக வளர்க்க வேண்டிய கடமை நிச்சயம் உங்களுக்கு உண்டு .
பிரித்தானிய தமிழர் பேரவையை ஒரு மக்கள் சக்தியாகவும் இதை ஒரு அரசியல் பலமாகவும் கட்டி எழுப்ப நீங்கள் எல்லோரும் கொடுத்த வாக்குறுதியை நம்பி நாங்கள் எல்லாரும் இணைந்து நின்று பல அலுவல்களை செய்து வந்தோம் .
கடைசியில் இன்று நடக்கும் ஒரு கேவலமான நிலைமையை பார்க்கும் போது என்றுதான் எங்கள் புலத்து தலைவர்கள் திருந்துவார்கள் என்ற கேள்வி மனதில் எழுகிறது . அன்று ரெய்நேர்ஸ் லேன் தேர்தல் அலுவலகத்தில் என்னோடு பணியாற்றிய‌ சில தமிழ் உணர்வாளர்களே இன்று ஒவ்வொரு பக்கமாய் உடைந்து போய் நிற்கிறோம் என்னும் போது எங்கள் ஒற்றுமை எவ்வளவு குலைந்து போய் உள்ளது என்பது கண்கூடு.

இங்கே எங்களை போன்ற‌வர்கள் வெறும் தொண்டர்கள் மட்டுமே. நீங்கள் தேர்தல் நடத்தினால் அதிலும் பங்களிப்போம் , மஹிந்த வந்தால் அங்கேயும் போய் போராடுவோம். எங்களை பொறுத்த வரை அமைப்பு ரீதியாக நாங்கள் தமிழீழ போரை பார்ப்பதில்லை.
தமிழீழம் எங்கள் உரிமை . ஒருவன் ஆயுதம் ஏந்தி போராடினான் . ஒருவன் பாடல்களை எழுதி மக்களை விழிப்படைய செய்தான் . இன்னொருவன் புலத்தில் போராடி வெளிநாடுகளை தட்டிக் கேட்டான் .இன்னும் சிலர் பணத்தை இரகசியமாக வழங்கி ஆதரவு கொடுத்தனர் . இவற்றில் சில உலக சட்டபடி தவறு என்றாலும் தர்மம் என்ற ரீதியில் இவை சரி.
இப்படி பட்ட ஒரு பெரும் வடிவமாக நாடு கடந்த அரசு என்ற கோட்பாடு வந்த போது , பல பெரியோர்கள் அறிவியலாளர்கள் இதை ஒரு புரட்சியாகவே பார்த்தனர். எனது அறிவுக்கு எட்டியபடி எனது பொறியியல் பீட நண்பர்கள் அனைவரும் இதுதான் இனி தேவை என்று பெரும் ஆர்வத்தோடு இதை பலபடுத்த எண்ணிய பொது , இதற்குள்ளும் இன்று உடைவு.
இந்த உடைவுக்கு காரணம் , இன்றுவரை புலத்தில் ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்பது இருக்காமையே . பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் தமிழீழ உணர்வாளர்கள் இணைந்து செயற்பட்ட அமைப்பு . இதில் இருந்த தலைவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்த காரண‌த்தால் , எல்லாரும் ஏற்று கொண்டு செயற்பட்டோம் . அதுவும் வன்னி தலைமை செயற்பட்ட நேரம் . எங்கள் உறுதியான தலைவர் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்த போது மக்களுக்கு கேள்வி எள‌வே இல்லை .

இன்றும் பல சிறந்த தலைவர்கள் இருப்பதனால் இது நன்றாகவே இயங்கும் . ஆனால் ராஜதந்திர ரீதியாக பார்த்தால் எங்களுக்கு ஒரு தேர்தல் மூலம் உலக தமிழர்களை இணைக்கும் ஒரு அமைப்புக்கு அதுவும் தேசிய தலைவர் மௌனமாகி போன நிலையில் , வாக்கு மூலம் தெரிவு செய்ய பட்ட இந்த அமைப்பு வேறு விதமான ஒரு பலத்தை கொண்டு இருக்கும் .

அந்த தேர்தலில் எங்களை பார்க்க வந்த பாதர் இமானுவேல் அடிகளார் எங்களை எல்லாம் வாழ்த்தி சென்ற போது நாங்கள் , நா க தமிழீழ அரசு , உலக தமிழர் பேரவையோடு தோளோடு தோள் நின்று புலம்பெயர் பலம் மக்கள் சக்தி , அரசியல் சக்தி என்று பயணிக்கும் என கனவு கண்ட போது மீண்டும் பொறாமை , தங்கள் செல்வாக்கு இல்லாத அமைப்புகளை ஒதுக்குதல் அல்லது கணக்கில் எடுக்காமல் விடுதல் போன்ற நடவடிக்கைளின் விளைவாக இன்று உடைந்து போய் நிற்கிறோம்.
இங்கே உடைந்து போய் நிற்பது வெறும் நாடு கடந்த அரசு அல்ல , ஒட்டு மொத்த புலம் பெயர் சமூகம். இணைய தளங்களில் அதுவும் பேஸ் புக் போன்ற சமூக தளங்களில் இளையோர் தொடக்கம் பெரியோர் வரை தர்க்கங்கள் புரியும் அளவுக்கு இந்த பிரிவு எங்களை சிதறடித்து நிற்கிறது. அதுவும்  ” பதிவு”  போன்ற இணைய தளங்கள் கேலிச்சித்திரங்கள் வரைந்து சாக்க‌டைக்குள் எங்கள் போராட்டத்தை தள்ளும் அளவுக்கு செயல்படுகின்றன.
இதனால் நிச்சயம் பிரித்தானிய தமிழர் பேரவை வரை இதன் பாதிப்பு இருக்கும் என்பது கண்கூடு .

அதனால் புலத்தில் ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர் என்ற ரீதியில் , உருத்திரகுமாரன் மற்றும் தமிழ்நெட் ஜெயா போன்ற பலருடனும் கலந்தாலோசித்து , ஒரு நடு நிலைமை போக்கில் இதை வழிபடுத்தி எங்களை போன்ற அமைப்பு பாராமல் செயல்படும் மக்களை ஒன்றிணைக்க வேண்டுகிறேன் . நீங்கள் மட்டுமல்ல இதில் சகலரும் இணைந்து கலந்துரையாடல் செய்து தீர்க்கப்பட வேண்டிய விடயம்.
இன்று நீங்கள் இதில் செயற்படாவிட்டால் பெருத்து செல்லும் இந்த உடைவில் தமிழீழ பயணத்தில் செல்லவேண்டிய பலர் எங்களுக்குள்ளே மோதுப்பட்டு நேரத்தையும் வலுவையும் வீணடிக்கிறோம்.

போட்டி அமைப்பு என்று வளர்க்காமல் , தமிழீழ போராட்டத்தை மக்கள் கைக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் , தலைவர்கள் இப்படி முரண்பட்டு நிற்பது சிங்கள பேரினவாதத்துக்கு தீனி போடும் ஒரு நிலையை உருவாக்கி விட்டது. அதனால் நீங்கள் உங்களுக்கு தெரிந்த பெரியோருடன் கலந்து ஆலோசித்து சிங்கள பேரினவாதிகளின்  வாய்க்கு அரிசி போடும் ஜனநாயக போரை தொடங்க என்னை போன்ற பலருக்கு இடம் தரவேண்டும் என வேண்டி நிற்கிறேன் .அமைதி அல்லது பாராமுகம் சரியன்று.
இன்று எடுக்கும் தீர்மான‌ங்கள் எங்கள் போராட்டம் மேலும் தீவிரம் ஆக்கப்படுமா இல்லையேல் அழிந்து போய்விடுமா என்பதை தீர்மானிக்கும். உலக தமிழர் பேரவையின் மக்கள் ஆதரவை நா க தமிழீழ அரசுக்கு வழங்கி , நா க தமிழீழ அரசின் ராஜதந்திர வெற்றிகளை தமிழீழ வெற்றிகளாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் முடித்து கொள்கிறேன் .
”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

சுஜே சுஜாதரன்
– ”If you feel you are doing the right thing , then stand for it “

மூலம்:  மின்னஞ்சலில் கிடைத்தது

TamilNet இன் 180 பாகை ஊடக தர்மம் – ஒரு மறுஅறிவிப்பு
அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது.

‘அமெரிக்கப் படை வந்துஇறங்கி  எல்லோரையும் மீட்டுச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கையை நடேசனுக்கு முன்னாள் புலி ஒருவர் அமெரிக்காவிலிருந்து கொடுத்தார்’ என்பதுவே TamilNet-இன்அந்தச் செய்தியாகும்.

யாரோ ஒர் “ஊடகவியலாளர்” சொன்னார் என்று சொல்லிக்கொண்டு Tamilnet வெளியிட்ட இந்தக் கற்பனைச் செய்திக்கு, உண்மையிலேயே Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் உள்ளன?

பின்னர் – இந்தச் செய்தியை இன்னும் மெருகூட்டி, அதில் வழுதியின் பெயரையும் இணைத்த தமிழ் தளம், வழுதி இதில் சம்மந்தப்பட்டிருந்தார் என்பதற்கோ, அல்லது என்னவிதமாகச் சம்மந்தப்பட்டிருந்தார் என்பதற்கோ ஏதேனும் ஆதாரங்களை வைத்துள்ளதா?

உண்மை என்னவென்றால் – விடயங்களை ஆழமாக அறிந்த ஒரு சிலரைத் தவிர, வெளிநாடுகளில் இருந்த, இப்போதும் இருக்கின்ற எல்லோருமே, “அவர் சொன்னார்,” “இவர் சொன்னார்,” என்று செவிவழிக் கதைகளைக் கேட்டுத் தான் கதைக்கிறார்கள், எழுதுகின்றார்களே அல்லாமல், உண்மை எவருக்குமே தெரியாது.

திரு. நடேசனுடன் தொடர்பில் இருந்தார் என்று சொல்லப்படும் இந்த “ஊடகவியலார்” யார்?

…அப்படி ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா?

…அல்லது, அப்படி ஒருவர் இருப்பதான மாயை ஒன்றை Tamilnet உருவாக்கி விட்டுள்ளதா?

…அப்படி ஒருவர் இருந்தாலும் அவருக்குக் கூட எந்த அளவுக்கு உண்மை தெரியும்?…

அவர் பேசுவது எந்த அளவுக்கு உண்மை என்பது பற்றி Tamilnet-ற்கு என்ன தெரியும்?…

நடேசனுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக, அவருக்கு எல்லாம் தெரியம் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?…

அதற்கும் மேலாக, அவர் நேர்மையுடனும் மனசாட்சியுடனும் தகவல்களைச் சொல்லுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?…

எல்லாவற்றுக்கும் மேலாக, Tamilnet-இன் நேர்மையும் இங்கே கேள்விக்கு உள்ளாகின்றது.

இத்தகைய சர்ச்சைக்குரிய இந்தச் செய்தியை வெளியிட முன்னதாக, அவர்கள் குறிப்பிடும் அந்த “முன்னாள் புலி”யைத் தொடர்பு கொண்டு, அப்படி ஒருவர் உண்மையாகவே இருந்தால், அவரிடம் இது பற்றி ஏதேனும் கருத்து கேட்டார்களா?… அவரது கருத்தை அறிய முயன்றார்களா?…

Tamilnet-இன் ஒரு ஆசிரியரும், இந்தச் செய்தியை உருவாக்கிய முக்கிய நபருமான, முத்துத்தம்பி சிறீதரன் அமெரிக்காவிலேயே வாழ்வதால், இந்த “முன்னாள் புலி”யுடன் நிச்சயமாக அவருக்குத் தொடர்பு இருக்கும். அப்படி இருந்தும், அவருடன் தொடர்புகொண்டு சிறீதரன் பேசாமல்விட்டது ஏன்?…

நடேசன் இப்போது உயிரோடு இல்லாத சூழலில், யாரோ ஒரு “ஊடகவியலாளர்” சொன்னார் என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து ஒரு செய்தியை எழுதும் முன்னதாக, அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, அதில் சம்மந்தப்பட்டதாகச் சொல்லப்படும் உயிரோடு இருக்கும் நபரிடம் அது பற்றி கேட்க வேண்டும் என்ற ஒரு அடிப்படை ஊடக-தர்மம் கூட TamilNet-ற்கு இல்லாமல் போனது ஏன்?… அல்லது, அவரிடம் அப்படி கேட்க விரும்பாதது ஏன்?…

இவை எதையுமே செய்யாமல் விட்டது, Tamilnet-இன் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் உள்நோக்கம் தொடர்பான பல கேள்விகளையே எழுப்புகின்றது.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட திரு. நடேசன் இப்போது உயிரோடு இல்லை என்பதால், இவ்வாறான புனை கதைகளை உண்மைக் கதைகளாக ஆக்கிச் சொல்லுபவர்களுக்கு அது வாய்ப்பாகவும் ஆகிவிட்டது.

நடேசன் இப்போது உயிரோடு இல்லை; அவர் தொடர்புபட்ட இந்த கதை பழைய கதை; அவர் இப்போது உயிரோடு வந்து கருத்துச் சொல்ல முடியாது; அதனால், அவருக்கு மரியாதை கொடுத்து அவர் சம்மந்தப்பட்ட விடயத்தை இப்போதைக்கு ஒரு ஓரமாக வைப்போம்.

அதே போல – “அமெரிக்கா வரும்” கதையை Tamilnet-ற்கு சொன்ன “ஊடகவியலாளரின்” உயிருக்கும் ஆபத்தாம், யாராவது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்தாலே வெளியில் வருவாராம். சரி, அவரின் “பாதுகாப்பு பிரச்சனைக்கு”ம் மரியாதை கொடுத்து, அவர் சம்மந்தப்பட்ட கதையையும் ஒரு ஓரமாக வைப்போம்.

ஆனால், Tamilnet வெளியிட்ட ஒரு புதுக்கதை உண்டு. குறிப்பிட்ட அந்த “முன்னாள் புலி” இந்தியாவுக்குச் சென்ற “இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர்களுடன் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக உரையாடினார்” என்பதே அந்தப் புதுக் கதையாகும்.

இந்தக் கதைக்கு Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?… அவற்றை அது பகிரங்கமாக வெளியிடுமா?… “அவர் சொன்னார்”, “இவர் சொன்னார்” என்று மேலும் கதை அளக்காமல், உருப்படியான, ஆணித்தரமான ஆதாரங்களை Tamilnet முன்வைக்குமா?…

உண்மை என்னவென்றால் – Tamilnet-இடம் எந்த அதாரங்களுமே இல்லை. எழுதப்பட்டவை எல்லாமே சுத்தமான கட்டுக் கதைகள்.

Tamilnet குறிப்பிடும் இந்த “ஊடகவியலாள”ருக்குப் பல உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

தெரிந்த சிலதுகளை வைத்துக் கொண்டு தெரியாத விடயங்களைப் பற்றியும், தெரியாத ஆட்களைப் பற்றியும் இப்படியானவர்கள் கதைகள் சொல்லித் திரிவதோ, அல்லது அவற்றைக் கேட்டுவிட்டு, தமது ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக, இன்னும் கற்பனைகளை இணைத்து, Tamilnet போன்றவர்கள் கண்டபடி எழுதுவதோ ஆழகல்ல; பண்பல்ல. அது ஒரு மிகவும் கீழ்த்தரமான செயல்.

இதில் இன்னொரு விடயத்தையும் பாருங்கள்:எல்லா விடயங்களும் தெரிந்த, எல்லா விடயங்களையும் செய்து முடித்த வெளிச் சக்திகள், ஒன்றுமே செய்திருக்காத நாமே, எல்லாவற்றையும் செய்தது போல, எமக்குள் சேறு வாரி எறியும் இத்தகைய செயற்பாடுகளைப் பார்த்து தமக்குள் ஏளனமாகச் சிரிப்பார்களா இல்லையா?… அமெரிக்கா, இந்தியா, நோர்வே மட்டும் அல்லாமல், சிறிலங்கா அரசாங்கமே எம்மை பார்த்து சிரிக்குமா இல்லையா?

இங்கே ஆகப் பெரிய கவலை என்னவென்றால் – ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. எவராவது, ஏதாவது உண்மையைச் சொல்ல முற்பட்டால் உடனடியாகச் சூட்டப்படும் “துரோகி” பட்டமும், அந்தப் பட்டத்திற்கு ஆதாரமாகக் கொடுக்கப்படும், முற்றிலும் பொய்யான, முற்றாகச் சோடிக்கப்பட்ட, கற்பனைக் கதைகளும், தேசபக்தி மிக்க பல நல்லவர்களைத் தொடர்ந்தும் ஒதுக்கிவருகின்றது.

“கெட்ட பெயர் எடுத்து விடுவோமோ” என்ற பயத்தையும், “கறை படிந்து விடுமோ” என்ற கவலையையும் நல்ல உள்ளங்களில் ஊட்டி அவர்களது வாய்களை மூட வைப்பது தான் உண்மையான “இனத் துரோகம்” என்பதை மக்கள் புரிந்து அடையாளம் காண வேண்டும்.

உண்மை என்ன?

இதுவரை வெளிவராத ஒரு தகவலை, காலத்தின் தேவை கருதியும், TamilNet.com மற்றும் அவர்களை அடியொற்றும் தமிழ் தளங்கள் வரலாற்றைத் தவறாகப் பதிவு செய்வதைத் தடுக்கும் முகமாகவும் மறு ஆய்வு இங்கே பதிவு செய்கின்றது.

அமெரிக்க படைகள் வன்னியில் இறங்கி விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் என்று சொல்லப்பட்டதான தகவலுக்கும் “விடுதலைப் புலிகள்” ஆசிரியர் ரவி மற்றும் வழுதி ஆகியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே மறுஆய்விடம் இருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் இருவருக்கும் இந்த விடயத்தில் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படும் கதை எவ்வித ஆதாரமும் அடிப்படையும் அற்ற கற்பனையாகும்.

நடந்த விடயம் இது தான் –

கடைசிப் போர் காலத்தில், ஆரம்பத்தில், அமெரிக்க அரசுடன் விடுதலைப் புலிகள் சார்பில் தொடர்பில் இருந்தவர், அங்கேயே வாழ்ந்துவரும் திரு. உருத்திரகுமாரன் தான்.அவர் கூட, வன்னியிலிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையின வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற அமெரிக்கா படைகளை அனுப்ப ஆயத்தமாக உள்ளதான தகவல், திரு. உருத்திரகுமாரன் மூலமாகவே வன்னிக்கு அப்போது சொல்லப்பட்டது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்காக திரு. நடேசன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, அப்போது விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரப் பொறுப்பாளராக இருந்த திரு. செல்வராசா பத்மநாதனும் (கே. பி) அமெரிக்க வெளிவிவகார அமைச்சு (State Department) அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் பேசினார்.

அந்த உரையாடலின் விபரத்தைத் திரு. பத்மநாதன் வன்னிக்கு வழங்கியதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை சார்பாக, வன்னியிலிருந்து, திரு. புலித்தேவன் அவர்களும் இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் சார்பில் சிறீலங்காவுக்கான அதன் தூதராகவும், தென்னாசியப் பிராந்தியத்திற்கான அதன் வெளிவிகாரத் துணை அமைச்சராகப் பொறுப்பேற்க இருந்தவருமான திரு. றொபேட் பிளேக் அவர்கள் சம்மந்தப்பட்டிருந்தார்.

TamilNet மற்றும் அதனை அடியொற்றும் தமிழ் தளங்கள் எழுதுவது போல, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு (Defense Department) இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருக்கவே இல்லை. குறிப்பாக, TamilNet குறிப்பிட்ட திரு. ஜேம்ஸ் கிளாட் என்பவர் இதில் தொடர்பு பட்டிருக்கவேயில்லை.

அதிலும் முக்கியமாக, TamilNet எழுதாமல் தவிர்த்த விடயம் என்னவெனில், 2009 ஜனவரி 20 ஆம் திகதி ஒபாமா அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் – திரு. ஜேம்ஸ் கிளாட், தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்திய துணை பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்தே விலக்கப்பட்டுவிட்டார். அவர், முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் ஆட்சியின் போதே அந்தப் பொறுப்பில் இருந்தார். அதாவது – வன்னியில் இறுதிப் போர் நடந்த கடைசி ஐந்து மாதங்களாக ஜேம்ஸ் கிளாட் அமெரிக்க அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பிலுமே இருக்கவில்லை.

அமெரிக்காவின் சார்பில் உண்மையில் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருந்தது அதன் வெளிவிவகார அமைச்சு (State Department) மட்டுமே ஆகும்.

முள்ளிவாய்க்காலில் தரையிறங்குவது தொடர்பில் அமெரிக்கா இரண்டு வேண்டுகோள்களை விடுத்தது. இந்த வேண்டுகோள்கள், நேரடியாக, புலித்தேவன் ஊடாகவே விடுதலைப் புலிகளின் தலைமையிடமே முன்வைக்கப்பட்டன. இதில் திரு. உருத்திரகுமாரனோ, அல்லது திரு. பத்மநாதனோ கூட தொடர்புபட்டிருக்கவில்லை.

1. தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்றரை இலட்சம் மக்களையும் விடுதலைப் புலிகள் முதலில், உடனடியாக விடுவிக்க வேண்டும்.

2. அமெரிக்க படைகள் தரையிறங்கும் பட்சத்தில், விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்கள் அனைத்தையும் போட்டுவிட்டு அவர்களிடம் சரணடைய வேண்டும்.இவை தான் அந்த வேண்டுகோள்கள்.

இந்த விவகாரத்தில் – நோர்வேயின் திரு. எரிக் சொல்கெய்ம் அவர்களும் ஒரு கட்டத்தில் தொடர்புபட்டு, சம்மந்தப்பட்ட இதே இரண்டு கோரிக்கைகளையும்திரு. நடேசன் அவர்களிடம் நேரடியாகத் தொலைபேசி ஊடாக முன்வைத்தார்.

ஆனால் – இந்த வேண்டுகோள்களை எல்லாம் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் உடனடியாகவே நிராகரித்துவிட்டார் என்பது வேறு விடயம். திரு. பிரபாகரன் இதற்கு உடன்படாதவிடத்து, தன்னால் வேற எதுவுமே செய்ய முடியாது என திரு. எரிக் சொல்கைம் ஊடனடியாகவே திரு. நடேசனிடம் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் – “இந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஏற்று நீங்கள் சரணடையத் தவறுமிடத்து, உலகின் பெரிய சக்திகள் உங்களை அழிக்காமல் விடாது” என்றும் எரிக் சொல்கைம் அந்த நேரத்தில் திரு. நடேசனிடம் சொன்னார்.

இதே நேரத்தில் – போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்பிற்கு திரு. றொபேட் பிளெக் பின்வருமாறு எழுதியிருந்தார்.

From: Blake, Robert O BlakeR2@state.gov

Date: Mar 24, 2009 6:41 PM

Thank you.  The United States, from Secretary Clinton, to Ambassador Rice, to myself and many others, is working hard to stop the shelling, assure sufficient food and medicine reach the IDPs in the safe zone; while at the same time doing our best to encourage efforts to persuade the LTTE to allow the civilians to leave.  Bob Blake

இதே நேரத்தில் – இவ்வாறான ஒரு சரணடைவு அல்லது காப்பாற்றும் முயற்சி தொடர்பில் இந்தியத் தரப்பிலிருந்தும் சில ஆட்கள் புலிகளுடன் பேசினர். புதுடில்லியிலிருந்தும், லண்டன் இந்தியத் தூதரகத்திலிருந்தும் இருவர் தொடர்ந்தும் வன்னியுடன் பேசினர்.

அவர்களும், அதே இரண்டு கோரிக்கைகளையே புலிகளிடம் முன்வைத்தனர்.இந்த விவகாரத்தில் ரவி மற்றும் வழுதி ஆகியோரின் பங்கு உண்மையில் வேறு விதமானதாக இருந்ததாகவே மறுஆய்விடம் இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் – தலைவர் அவர்கள் நேரடியாகவே ரவியிடமும், நடேசன் மூலமாக வழுதியிடமும் ஆலோசனை கேட்ட போது அவர்கள் வேறு கருத்துக்களையே கூறியிருந்தனர்.

வழுதி இந்த விடயத்தை இந்தியாவின் கோணத்திலிருந்து பார்த்ததாகவே மறுஆய்விடம் உள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

‘விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இந்தியாவை மீறி அமெரிக்கா எதுவுமே செய்யாது; அவ்வாறு அமெரிக்கா செய்யவும் முடியாது; தலைவர் பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்பது தான் இந்தியாவின் நோக்கம் எனில், அதற்குக் குறுக்காக அமெரிக்கா நிற்காது. விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என இந்தியா விரும்பினால், இந்தியா தானாகவே அதைச் செய்யும். அந்தத் தேவை இந்தியாவுக்கு இல்லை எனில், வேறு யாரையுமே கூட அதைச் செய்ய இந்தியா விடாது,’ என்ற விதமாக நடேசனிடம் வழுதி அப்போது கூறியிருந்தார்.

ரவி இந்த விடயத்தை வேறு விதமாகப் பார்த்து, அவ்வாறே தலைவரிடமும் கூறியிருந்தார்:‘உண்மையில் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற யாருமே வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளைக் காக்க வேண்டிய தேவையும் எவருக்கும் இப்போது இல்லை.

உண்மையில் – இவ்வாறாக, காப்பாற்ற வருகிறோம் எனப் போர் நடக்கும் போதே தொலைபேசியல் சொல்வதெல்லாம், அந்த உரையாடல்களின் ஊடாக விடுதலைப் புலிகளின் மனநிலையையும், அவர்களது தாங்குசக்தியையும் அளவிட்டு, அதற்கு ஏற்ற விதமாகப் போரை முனைப்புப் படுத்துவதற்குத் தான்,’ என்ற விதமாகவே ரவி தலைவரிடம் அப்போது கூறியிருந்தார்.

ஆனாலும், ரவியினதும், வழுதியினதும் கருத்துக்களை உதாசீனம் செய்துவிட்டு, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்தனர் விடுதலைப் புலிகள்.

அது மட்டும் அல்லாமல் – போரின் கடைசி நேரத்தில், அழிவின் விளிம்பில் இருந்த போது, அவல விரக்தியில், உதவி கோரி எவர் எவரையோ எல்லாம் தொடர்புகொள்ள ஆரம்பித்துவிட்டது விடுதலைப் புலிகளின் தலைமை.

அந்தப் பட்டியல் – இராஜதந்திரிகள், உலக புலனாய்வு நிறுவனங்கள், அனைத்தலக ஊடகவியலாளர்கள்,அடுத்ததாக ஆட்சிக்கு வரும் என அப்போது “நம்பப்பட்ட” அ. தி. மு. க-வின் சசிகலாவின் கணவர்  நடராஜன், அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் மைத்திரேயன்,தி. மு. க. வின் கனிமொழி, திரு. சந்திரநேரு மற்றும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என நீண்டு, கடைசியாக, பசில் இராஜபக்ச வரை சென்றது.

2009 மே மாதம் அளவில், முடிவு தெளிவாகத் தெரிய ஆரம்பித்த போது – திரு. சந்திரநெரு, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைமை, தமது சரணடைவு தொடர்பில் பசில் இராஜபக்சவுடன் பேசுமாறும் கேட்டுக்கொண்டனர்.பசில் இராஜபக்சவுடன் அது பற்றிய பேச்சுக்களும் நடத்தப்பட்டன.

அந்த வகையிலேயே – வேறு தரப்பு ஒன்றின் ஊடாகத் தனக்குக் கிடைத்த திரு. ஜேம்ஸ் கிளாட் அவர்களின் தொடர்பை வழுதியிடம் கொடுத்து, அவருடனும் பேசும்படி திரு. நடேசன் அவர்களே வழுதியிடம் கேட்டிருந்தார்.

ஆனால், திரு. நடேசன் அவ்வாறு கேட்டக்கொண்ட போதும், திரு. ஜேம்ஸ் கிளாட்டுடன் வழுதி அந்த நேரத்தில் பேசவோ, அல்லது எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தவே இல்லை என்பதே எம்மிடம் உள்ள தகவல்.அது மட்டும் அல்லாமல் – “ஒபாமா அரசாங்கத்தில் இப்போது ஜேம்ஸ் கிளாட் இல்லை. அதனால் அவருடன் பேசுவதால் எந்தப் பயனும் கிடைக்காது.” என்ற தகவலையே வழுதி அப்போது திரு. நடேசனிடம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் – திரு. நடேசன் மற்றும் திரு. புலித்தேவன் ஆகியோர் ஜேம்ஸ் கிளாட்டுடன் தாமே நேரடியாகத் தொலைபேசி ஊடகப் பேசினர். ஆனால், ‘தன்னால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்றும்; சிறிலங்கா விவகாரத்தில் முடிவு எடுக்கும் சகல அதிகாரங்களும் திரு. றொபேட் பிளேக் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றும் ஜேம்ஸ் கிளாட் அப்போதே திரு. நடேசனிடம் நேரடியாகத் தெரிவித்துவிட்டார்.

இது இவ்வாறு இருக்க – கடைசிப் போர்க் காலத்தில், தலைமையின் வழிநடத்தல் தொடர்பில் இயக்கத்திற்குள் எழுந்த சலசலப்புக்களை அடக்குவதற்காக, போராளிகளுக்கும், தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும், “கல்விமான்கள்” சிலருக்கும், “அமெரிக்க படை இறங்கும்” என்றவிதமான கற்பனைக் கதை தலைமையால் அப்போது சொல்லப்பட்டது.இந்த விடயத்தில் – போராளிகளும், தளபதிகளும், “கல்விமான்க”ளும் அதனை நம்ப வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு நன்கு தெரிந்த வழுதியின் பெயரை இந்தக் கதையோடு சேர்த்து, தலைமை அப்போது சொல்லியிருந்தது.

கடைசியாக, மே மாதம் 16 ஆம் திகதி அளவில் – தாம் முல்லைத்தீவில் தரையிறங்குவதற்கான அனுசரணையை இந்தியாவிடம் கேட்ட போது, ‘நாம் விரும்பிய விதமாகவே போர் நடந்துகொண்டிருக்கின்றது; நாம் அதைப் பார்த்துக்கொள்கிறோம்; நீங்கள் விலகி இருங்கள்’ என்று தம்மிடம் இந்தியாவால் சொல்லப்பட்டதாக அமெரிக்கத் தரப்பால் திரு. உருத்திரகுமாரனிடமும் திரு. பத்மநாதனிடமும் சொல்லப்பட்டது.

அமெரிக்காவுடன் மட்டும் அல்லாது, திரு. பத்மநாதன் அவர்கள் வேறும் பல வெளிநாடுகளுடனும் அந்த நேரத்தில் தொடர்பில் இருந்து, போரை நிறுத்தி, விடுதலைப் புலிகளையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு முயற்சிகளைச் செய்தார். திரு. பத்மநாதனுடன் சேர்ந்து இந்த முயற்சியல் ஈடுபட்ட பலரது விபரங்களும், அவை தொடர்பான ஆதார ஆவணங்களும் மறு ஆய்விடம் உள்ளன.

முள்ளிவாய்க்காலுக்கு வெளியிலேயே இருந்த Tamilnet ஆசிரியர்கள் இருவருமே, புலிகளின் அழிவுக்கான காரணத்தை முள்ளிவாய்க்காலிலேயே தேடி, அந்த அழிவுக்கான காரணத்தைப் புலிகளைத் தவிர்த்துவிட்டு வேறு ஆட்கள் மீது போடப் பார்க்கின்றார்கள்.

இதன் மூலம், புலிகளின் அழிவு என்பது முள்ளிவாய்க்காலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது என்பதை மறைத்துவிடப் பார்க்கின்றார்கள்.

இந்த இடத்தில் – வழுதியோ, அல்லது ரவியோ, அல்லது பத்மநாதனோ, அல்லது உருத்திரகுமாரனோ விடுதலைப் புலிகளின் தலைமையை நம்ப வைத்து ஏமாற்றினார்கள் என்ற ஆதாரமற்ற கதைக்கு மேலாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், அழிவின் விளிம்பில் தாம் நின்ற போது, அந்த அழிவிலிருந்து தம்மைக் காப்பாற்றுவதற்காக, அமெரிக்கர், இந்தியர் என தமது வரலாற்று எதிரிகளையே நம்பும் அளவுக்கு விடுதலைப் புலிகளின் தலைமை போயிருந்தது என்பதாகும்.

வைகோவின் எதிர்காலம்?
- எஸ்.கே. செந்தில்

கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட  ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம்  அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை  கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. அரசியல் சுனாமி எந்த நேரத்தில் யாரை வீழ்த்தும் என்பதை அறிந்து கொள்ளவும்,  அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வெறும் அரசியல் அனுபவம் மட்டும்  போதாதது. சடுதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்து, அதற்கு  கட்சியினரையும் தயார் படுத்த வேண்டும்  என்கிற அனுபவத்தை நீண்டகால அரசியல்  அனுபவமும் தமிழகம் முழுக்க இளைஞர்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள வைகோ,  குறிப்பிட்ட சாதிக் கட்சித் தலைவரான ராமதாஸிடம் இருந்து கற்றுக் கொள்ள  வேண்டும்.

தமிழகத்தில்  எல்லா தொகுதிகளிலுமே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் விதமாக அல்லது சில  ஆயிரம் வாக்குகளையாவது கொண்டுள்ள மதிமுக இனி வரும் காலத்தில் தனது இந்த  வாக்கு வங்கியை தக்க வைக்குமா? அல்லது பெரும் போட்டியில் பெருங்கட்சிகளிடம்  தன் தொண்டர் பலத்தை பறிகொடுத்து விடுமா? என்பதே இப்போதுள்ள கேள்வி.  திமுகவிலிருந்து அவர் வெளியேறிய நேரம் சுமார் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக  இளைஞர்களைத் திரட்டி சென்னையில் பிரமாண்ட பேரணியை நடத்திக் காட்டினார்.  தமிழக அரசியலில் திமுகவின் ஆதிக்கம் முடிந்து விட்டது என்று சொல்லும்  அளவுக்கு 19 மாவட்ட செயலாளர்கள் வைகோவின் பின்னர் சென்றார்கள். கால  ஓட்டத்தில் அரசியற் களத்தில் முடிவெடுப்பதில் நேர்ந்த தள்ளாட்டத்தின்  பின்னர் இப்போது பெரும்பலானவர்கள் தாய் கழகம் என்று சொல்லிக் கொள்ளும்  திமுகவிற்கே திரும்பிச் சென்று விட்டார்கள். இப்போது வைகோவிடம்  எஞ்சியிருப்பவர்கள் நீண்ட கால அரசியல் அனுபவம் அற்ற வெகு சிலரே.  ஜெயலலிதா,  முதுகில் குத்திய துரோகத்தை தாங்க முடியாதவராக தனது அண்ணாநகர் வீட்டில்  முடங்கிக் கிடக்கிறார். யாருடனும் அவர் இரண்டு மூன்று நாட்களாக பேசவில்லை.  நாளை சென்னை மெரீனா கடற்கரையில் பார்வதியம்மாளின் அஸ்திக் கரைப்பில் தன்  சகாக்களுடன் கலந்து கொள்கிறார்.

தேர்தலிலும்,  சினிமாவிலும் ஒரே பார்முலாதான். பந்தயத்தில் ஓடுகிற குதிரை மீதுதான்  பந்தயம் கட்டுவார்கள். வைகோவும் ஓடுகிற குதிரைதான். ஆனால் குதிரை ஓடுவது  பெரிதல்ல எதை நோக்கி ஓடுகிறோம் என்பதும் முக்கியம். தனக்கு வேண்டியவர்கள்  வேண்டாதவர்கள் என்ன செய்கிறார்கள்  என்கிற எண்ணம் வேண்டும். வைகோ  தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராகப்  போராடினார்.  அந்த ஆலை நிர்வாகம்தான் ஜெயலலிதாவின் தேர்தல் செலவுகளுக்கு  திமுகவை தாக்குப் பிடிக்கும் வகையில் கொட்டிக் கொடுக்கிறது. அந்த நிர்வாகம்  போட்ட ஒரே கண்டிஷன் வைகோ கூட்டணியில் இருக்கக் கூடாது என்று. ஆக ஜெயலிதா  முதலில் ஒப்பந்தம் போட்டது தேர்தலுக்கு நிதி தருகிறவர்களோடு. இரண்டாவது  நிதி தருகிறவர்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் கூட்டணியை அமைப்பது என்று.  அதற்கான தரகர்கள் மூலம் விஜயகாந்தின் தேமுதிக வுடன் கூட்டணி பேரங்களை  நடத்தி முடித்து விட்டு, ஆனால் அதை ரகசியமாக வைத்து ஏனைய கட்சிகளையும் பேசி  விட்டு, வைகோ திமுக பக்கம் சாய வாய்ப்புக் கொடுக்காதவாறு காய்  நகர்த்தினார் ஜெயலலிதா. அதாவது தானும் சீட் கொடுக்காமல் அவர் எதிரணிக்கும்  போய்விடாமல் பார்த்துக் கொண்டார். அதனால்தான் ஐந்து தொகுதியில் தொடங்கி  எட்டுக்கு வந்து 12 – ஐத் தாண்டாமல் பார்த்துக் கொண்டார். ஆனால்  வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள ரமதாசின் பமக 30 தொகுதிகளில்  போட்டியிடும் போது பரவலாக வாக்கு வங்கியைக் கொண்ட மதிமுக இருபதுக்கும்  குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமமானதுதான். அதனால் அவரது  முடிவு சரி பிழைகளுக்கு அப்பால் இனி வைகோவுக்கு வேறு வழியில்லை.  ஜெயலலிதாவின் இந்த வஞ்சகமான சூழ்ச்சியை அவர் அறிந்து கொள்வதற்குள்  திமுகவில் சீட் பேரங்கள் முடிவுக்கு வந்து விட்டது.

தேமுதிகாவை  அழைத்துப் பேசிய உடனேயே வைகோ வேறு மூவ் செய்திருந்தால் ஒரு வேளை திமுக  தலைமையில் காங்கிரஸ் தவிர்த்த சிறந்த கூட்டணி ஒன்று உருவாகியிருக்கக்  கூடும். இரு கட்சிகளுக்குள்ளும் நிலவிய ரகசிய பேரங்கள் வைகோவின் அரசியல்  வாழ்வில் விளையாடி விட்டது. இனி என்ன செய்வது கட்சியை? தொண்டர்களை?  எப்படிக் காப்பாற்றுவது?

எஞ்சியிருக்கும்  கட்சியை திமுகவிடம் பறி கொடுக்குமா? அல்லது இனி வரப்போகும் நாட்களில்  கட்சியை வளர்த்து மேலும் பலத்தை வளர்ப்பாரா? என்பதெல்லாம் மிகப்பெரிய  கேள்விதான். இன்றைய அரசியலில் ஆதாயம் இல்லாமல் எந்த தொண்டனும் லட்சியம்  கொள்கை என்றெல்லாம் எந்த கட்சிக்கும் வரமாட்டான். எங்கும் வியாபித்து விட்ட  ஊழல் தொண்டனிடமும் பற்றிக் கொண்டிருக்கும் சூழலில் அதிருப்தியடைந்து விட்ட  மதிமுக தொண்டர்களை திமுக அபகரித்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்த சிரமமும்  இருக்காது. இந்நிலையில்தான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வைகோவுக்கு  ஒரு கடிதம் எழுதி அதில் கருணாநிதி வைகோவுக்கு செய்ததை எல்லாம் சுட்டிக்  காட்டி ஆரிய மாயை முதுகில் குத்தி விட்டது என்று  குத்திக்காட்டியிருக்கிறார். கருணாநிதியை ஆதரியுங்கள் என்பதை  சுற்றிவளைத்துச் சொல்லும் வீரமணியின் கடிதத்தை இரண்டு விதமாகவும்  பார்க்கலாம். வீரமணி மூலமாக கருணாநிதி வைகோவை என்னை ஆதரியுங்கள் அடுத்த  தேர்தலில் உங்களை கவனிப்பேன் என்பது ஒன்று. இன்னொன்று என்னை ஆதரிக்க  விட்டால் வரும் நாட்களில் உங்கள் கட்சியை இல்லாமல் ஆகி விடுவேன் என்பது  இன்னொன்று. இப்போது வைகோவுக்கு வேறு வழியில்லை. திமுகவை அனுசரித்துச்  செல்வதும் அதன் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து பேசுவதன் மூலம் நடைபெற  இருக்கும் தேர்தலில் திமுகவை ஆதரித்து கட்சியை காப்பாற்றிக் கொள்வதும்.  இல்லை என்றால் இரண்டு அரசியல் ஆக்டோபஸ்களுக்கு மத்தியில் அவர் கட்சியை  கலைத்து விடக் கூட நேரலாம். இது அரசியல் ஆருடம் அல்ல, அனுமானம்.

கடாபி ஹீரோவா அல்லது நீரோவா!
எஸ்.எம்.எம்.பஷீர்

“நானே மக்கள்,! , கதிரவன் எனது கைச்சட்டைக்குள் ஒரு ரோஜா, நாளின் தீக்குதிரைகள் எனது குருதியில் பாய்ந்து செல்ல, எனது பிள்ளைகள் அடக்குமுறையாளனை தோல்வியுறச் செய்வர் எனது வழியை யார் தடுக்க முடியும்” ( அஹ்மத் புவார்ட் நிம் )- எகித்திய மக்கள் எழுச்சியின் போது பாடிய அஹ்மத் புவார்ட் நிம் எனும் வயோதிப கவிஞனின் பாடலில் ஒரு பகுதி

ரோம சக்கரவர்த்தி நீரோ ரோமாபுரி பற்றி எரியும் போது வீணை வாசித்தான் என்று சொல்லப்படுகிறது. (அதற்கும் இப்போது வரலாற்றாளர்கள் மறுப்பு வெளியிட்டாலும் அந்த வசையுடன் நீரோ இன்னமும் அறியப்படுகிறான் என்பதால் அந்த தலைப்பும் கடாபிக்கு பொருத்தமாக அமையப்போகிறதா என்ற கேள்வியுடன் இக்கட்டுரையும் எழுதப்படுகிறது. அண்மைக்கால கடாபியின் ஏகாதிபத்தியத்துடனான சமரசங்களையும் புரட்டி பார்த்துக்கொண்டே இன்றைய நிலை பற்றியும் அலச வேண்டியுள்ளது விரிவாக

ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பாவும் லிபியா மீது விதித்திருந்த பொருளாதார தடையை 2004 நீக்கி லிபியாவுடன் செய்து கொண்ட பேரம் பேசலில் அங்கு பிரித்தானியாவின் வர்த்தக நலனை மேம்படுத்தும் வகையில் சுமார் 150 கொம்பனிகள் காலூன்ற வழி செய்யப்பட்டது. லிபியாவின் பரந்துபட்ட எண்ணெய் வளங்களை சுரண்ட பிரபல பிரித்தானிய என்னை கொம்பனிகள் அது சார்ந்த தொழில் துறை கொம்பனிகள் அங்கு செயற்பட கடாபி வழிசமைத்தார். அதன் தொடர்சியாக மீண்டும் 2007லில் டோனி பிளையார் வீ .பீ (B.P) எனும் பிரபல எண்ணெய் கம்பனியின் எண்ணெய் அகழ்வுக்கான மில்லியன் 560 பவுண்ட்ஸ் ஒப்பந்தமொன்றையும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் வகையில் கைசாத்திட பேரம் பேசி அமுல்படுத்தினார்.

ஆபிரிக்காவிலே அதிகூடிய எண்ணெய் வாயு உள்ளதாக அறியப்பட்ட லிபியாவில் ஷெல் கம்பனி உட்பட மேலைத்தேய கம்பனிகள் கடாபியுடன் சுமுகமான உறவை பேணும் ஆலோசனையை தத்தமது அரசுகளுக்கும் வழங்கியுள்ளன. மறுபுறம் பொருளாதாரத்தடையை நீக்கியதுடன் லிபியாவுக்கான பிரித்தானிய ஏற்றுமதி 930 மில்லியன் பவுண்ஸ்களை எட்டியது. மேலும் லிபியாவில் இரண்டு முதலீட்டு ஒப்பந்தங்களை இத்தாலி கூட செய்து கொண்டது. இந்த பின்னணியில்தான் லோகேர்பீ விமான குண்டு வெடிப்பு சம்பந்தமாக குற்றவாளியாக காணப்பட்ட அப்துல்பசெட்பல்-மேகராஹி செப்டம்பர் ல் விடுதலை செய்யப்பட்டார்.

இலண்டனிலிருந்து தற்போது துபாய்க்கு சென்றிருககும் சுமார் எண்பத்து நான்கு வயதான லிபிய பிரதம மந்திரி முஸ்தபா அஹ்மத் பென்-ஹலீம் சுகவீனமுற்றிருப்பதுடன் தனது வயது சுகவீனம் காரணமாக கேட்புலனும் பாதிக்கப்பட்டிருப்பதால் பரஸ்பரம் இருவரும் தொலைபேசியில் நேர்கண்டாலும் விளங்கி கொள்வது கடினம் என அவரின் துபாயிலுள்ள மகன் அவரின் லண்டனிலுள்ள உதவியாளருக்கு என்னிடம் சொல்ல சொல்லியுள்ளார் , அது தவிர அவர் முன்னாள் லிபிய அரசர் இத்ரீசின் ஆதரவாளர் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததது. மேலும் இங்கிலாந்தில் தனது அரசியல் அனுபவங்களையும் லிபியாவின் எண்ணெய் வளம் ஏற்படுத்திய மாற்றங்கள பற்றியும் அரச ஆட்சி , அரசுக்கெதிரான சதி என்பன பற்றியும் மட்டுமல்ல அண்டை நாடுகள தொடர்பில் லிபியா வகத்த பங்கு என பதின்மூன்று அத்தியாயங்களில் சரித்திரத்தின் நியாய சபையில் எனது சாட்சியம் என்ற முடிவுரையுடன் லிபியா: நம்பிக்கை ஆண்டுகள் ( The Years of Hope) என்ற பெயரில் ஆங்கில அரபு மொழிகளில் நூலாக வெளியிட்டுள்ளார்.

அந்நூலே சுதந்திர லிபியா தொடக்கம் ஆரம்பகால கடாபியின் லிபியாவரையான காலப்பகுதியை அரச ஆதரவாளரான கடாபி எதிர்ப்பாளரான ஒரு லிபிய ஆரசியல்வாதியின் வாக்கு மூலமாக மட்டுமல்ல லிபியா பற்றிய அரசியல் தேடுதலுக்கு துணை செய்கின்றதாக அந்நூல் அமைகின்றது. எவ்வாறெனினும் மேலைத்தேய நாடுகளுக்கு சவால் விட்ட கடாபியினை தமக்கு ஆதரவாளாராக மாற்றி கவிழ்ப்பதில் தீவிரமாக முனைந்திருக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் ஒரு இறைமையுள்ள நாட்டை இராக்கையும் ஆப்காநிஸ்தானையும் ஆக்கிரமித்து சின்னா பின்னப்படுத்தியதுபோல் லிபியாவையும் செய்ய முஸ்தீபுகளை கடாபியின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை , அடக்குமுறைகளை சாட்டாக கொண்டு உட்புகும் நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார்கள்.

மக்கள் புரட்சி எப்போதுமே இரத்தம் சிந்தியே வெற்றி பெற்றுள்ளது என்பதை மறுதலிக்கும் வகையில் எண்பதுகளின் பிற்பகுதியில் போலாந்து (1989) ஹங்கேரி (1989) ஆகிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் குத்துக்கரண மாற்றங்கள் அடக்குமுறை ஆட்சியாளர்கள் அமைதியாக ஜனநாயக ஆட்சி முறைக்கும் வந்து தம்மையும் காப்பாற்றி கொணடனர் , ரொமேனியா சர்வாதிகாரி மட்டும் சசெஸ்கூ மக்களைக் கெதிராக சவால் வீடு அடக்க முற்பட்டு தூக்கில் உயிரிழக்க வேண்டி நேரிட்டது. (1989) கிழக்கு ஐரோப்பாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சோவியத் தொடக்கிவைத்த மாற்றங்களுடன் இறுதியில் சோவியத்தும் அமைதியான மாற்றத்துக்கு உள்ளானது (1991). அதே ஆண்டில்தான் (1989) தினமன் சதுக்கத்தில் (Tiananmen Square) மாணவர் புரட்சியும் வன்முறை பிரயோக்கி பட்டு சீன அரசால் அடக்கப்பட்டது. பர்மாவிலும் சுதந்திர ஆர்ப்பாட்டம் அதற்கு முன்னைய வருடத்தில் (1988) அடக்கி ஒடுக்கப்பட்டது.

இந்த புரட்சிகள் நடைபெற்று இரு தசாப்தங்களின் பின்பு மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்கா அரபு நாடுகளில் இப்போது அடுத்தடுத்து நடைபெறும் மக்கள் போராட்டங்களும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் நடந்து முடிந்த மக்கள் புரட்சிகளை நினைவு கூறச் செய்கின்றன. மீண்டும் லிபியாவுக்குள் மட்டுமல்ல இன்று பொருளாதாரப் பலத்தை கொண்டுள்ள அரபு நாடுகளின் அரசியல் பலத்தை கட்டுப்படுத்த வேண்டிய மூல உபாயங்களை தீவிரமாக வகுத்துக் கொண்டிருக்கும் ஒருபுறம் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தமது நலன் சார்ந்த ஆட்சி மாற்றத்தையும் பற்றி தீவிரமாக அக்கற்றை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் பகைவர்களாவிருந்து இன்று அவர்களின் நண்பர்களாக மாறியவர்களை அவ வேகாதிபத்தியங்களே பழிதீர்த்து கொள்வதை அல்லது பலி தீர்க்கப்படுவதை ஆதரித்து செயற்படுவதை அண்மைய உதாரணமாக இராக்கிலிருந்து தொடர்ந்து செல்லும் பயணத்தில் இப்போது லிபியாவில் வந்து நிற்கிறது. பஹ்ரைனில் மனித உரிமைக்காக பஹ்ரைன் அரசுக் கெதிராக தொன்னூறுகளின் முற்பகுதியில் குரல் கொடுத்த முக்கிய பிரித்தானியர் டேவிட் கிளாட்ஸ்டோன் (David Gladstone) .

இவர் பிரித்தானிய அரசு தமது சுய பொருளாதார நலனுக்காகாக பஹ்ரைனை கண்டும் காணாமல் இருக்கிறது என்று குற்றமும் சாடியவர் . அதற்கும் மேலாக இவர் இங்கையின் பிரித்தானிய தூதுவராக இருந்த போது தேர்தல் சாவடிகளுக்கு சென்று தேர்தல் முறைகேடுகள் பற்றி கருத்துரைத்தவர் என்பதற்காக அங்கிருந்து -தூ துவராக இருப்பதிலிருந்து – நீங்கி (persona non grata) செல்ல வேண்டி நேரிட்டவர். எவ்வாறாயினும் தமது காலனித்துவ மனப்பதிவுடன் உள்நாட்டு விவகாரங்களில் ஏகாதிபத்தியங்கள் தலையிடுவ தென்பதும் , அவாறான தலையீடுகளுக்கு அந்நாட்டு பிரஜைகளை உள்நாட்டில் தகுந்த சன்மானம் வழங்கி கைகூலிகளாக வைத்திருப்பதும் அல்லது அவ்வாரானவர்களுக்கு தமது நாட்டில் அகதி அந்தஸ்து வழங்கி தமது நாட்டு சமூகத்தில் உள்ளீட்டம் (Assimilation) செய்வதுமாக பல் படித்தரமான நடவடிக்கைகள் ஊடாக தமது அரசியல் மூலோபாய இலக்குகளை அடைந்து கொள்வதும் மேற்குலகின் தந்திரமாக இருந்து வருகிறது.

இதற்கான சூழலையும் துரதிஷ்டவசமாக சுதேசிய நாடுகளின் தலைவர்களின் ஜனநாயக மறுப்பு எதோச்சதிகாரம் மனித உரிமை மீறல் என்பன ஏற்படுத்திவருகின்றன. அந்த பின்னணிகளையும் கருத்தில் கொண்டு இன்றைய அரபுலக போராட்டங்கள் தமது இலக்குகளை அடைய வேண்டும் என்பதுவே மிக முக்கியமானதாகும் லிபியா மீது பல்வேறு சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து அங்கு உள் நுழைய முற்படும் அமெரிக்க ஐரோப்பிய இராணுவ உட்புகுதலை -உதவியை- அம்மக்களும் விரும்பவில்லை என்பதை மிக தெளிவாக சொல்லியுள்ளார்கள். என்றாலும் கடாபி , அதற்கு வழி சமைப்பாரா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.

தின்னமன் சதுக்கத்தில் சீன பலகலை கழக மாணவர் முன்னின்ற கிளர்ச்சி பற்றிய பின்னணிகள் பற்றிய பல செய்திகள் அனுமானங்கள் சென்ற வருடம் அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட லியு சியாபூ என்ற சீனருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு இதனை நிரூபிக்கும் அண்மைய நிகழ்வாகும். எவ்வாறெனினும் இன்று சீனா உலகின் இரண்டாவது பொருளாதரா சக்தியாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நபுஞ்சக தனத்தை இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் , அதற்காக எந்த எளிய செயலையும் செய்யும் ஒரு கேவலமான சம்பவமாக உலகின் கேவலமான ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கும் அமரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்த தொலைபேசி சுவிட்சுகள் சீன உத்தியோகத்தர்களின் உரைடாடல்களை இலகுவில் ஒட்டுக் கேட்கும் வகையில் இருந்ததையும் , சீன அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த விமானங்கள் சீனாவின் ஆகாயப்படை ஒன்று விமானங்களின் பதிப்பு விமானங்களில் நவீன ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப் பட்டிருந்ததையும் சீன கண்டு பிடித்தது என்பதும் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை காட்டுகிறது. ஆகவே போராட்டங்கள் மக்கள் போராட்டமாக பரந்து பட்ட ரீதியில் வீரியம் கொள்ளும் போது தமது ஆபத்பாந்தவனாக அமெரிக்காவையோ அல்லது ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளையோ மக்கள் நாடினால் அல்லது அவர்களின் கைகூலிகளை தலைவர்கள் ஆக்கினால் விளைவுகள் என்னவாகவிருக்கும் என்பதையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.

ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டுக் கொல்வது வேடிக்கையானது என்றும் தனது படையணியினருக்கு அவ்வாறு கட்டளையிட்டதுடன் இராக்கினை ஆக்கிரமித்த பின்னர் “தன்னுடன் முரண்பட்டால் உங்கள் எல்லோரையும் சுட்டுதள்ளுவேன்” என்று இராக்கிய சுதேசிய மக்களை விரட்டிய ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் ( General James Mattis ) ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளின் மத்திய ஆணையின் உயர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டதையும் நான் அமெரிக்காவின் அண்மைக்கால மனித உரிமை அரசியல் கபடத்தனத்துக்கு உதாரணங்களாக கொள்ளலாம். இப்போதெல்லாம் பல விகிலீக்ஸ் தகவல் பரிமாற்றங்கள் வெளிவந்து ஏகாதிபத்திய நாடுகளின் அவர்களின் ஆதரவு நாடுகளின் முகத்திரையை சற்று நீக்கத் தொடங்கியிருக்கிறது. இன்றைய உலகின் முதிர்ந்த அரசியல் ஞானியும் இடதுசாரி கருத்தியலாளரும் பாலஸ்தீன மக்களின் நியாயபூர்வ உரிமைகள் தொடர்பிலும் இராக்கிய மக்களின் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் , தான் சார்ந்த சமூகமான யூதர்களின் சியோனிஸ கருத்தியல்கள் குறித்தும காரசாரமான விமர்ஷனங்களை முன்வைத்து இஸ்ரேல நாட்டு இஸ்தாபிதத்தையும் கேள்விக்குட்படுத்திய அறிஞர் எரிக் ஹோப்ச்வாம் ( Eric Hobsbawm) அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை தலையீடுகளை ” மனித உரிமைகள் ஏகாதிபத்தியம் ” (Imperialism of human rights ) என்று கூட சொல்லலாம் என்று குறிப்பிடுகிறார். இப்போது லிபியாவில் தனது மனித உரிமை ஏகாதிபத்தியத்திற்கான தலையீட்டை கடாபி ஏற்படுத்தி கொடுப்பாரா அல்லது அமைதியாக வெளியேறிவிடுவாரா அல்லது தமது எதிர்ப்புக்களை அடக்கி வெல்வாரா !! . பதிலும் வெகு தூரத்திலில்லை.

கடாபியின் லிபியாவிற்கும் இலங்கை மற்றும் மூன்றாம் உலக நாடுகள் நெல்சன் மண்டேலாவின் தென் ஆபிரிக்காவிற்குமான தொடர்புகள் குஜன ஊடக செய்திகள் ஆனால் இலங்கையின் ஆட்சியுடனான அரசியல் தொடர்புகளுக்கு அப்பால் இஸ்லாமிய சோசியலிச முன்னணி எனும் கட்சியை தோற்றுவித்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதயுதீன் கடாபியுடன் நேரடியாக தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைத்தவர் என்பதுடன் கடாபியும் இஸ்லாமிய சோசலிசம் -பொதுவுடைமை- கொள்கையை தனது பச்சை நூல் மூலம் பரப்பியவர். அவரின் மத வியாக்கியானங்கள் தான் சர்ச்சைக்குரியனவாக அமைந்தன. அதேவேளை எழுபதுகளில் கடாபியின் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு , மூன்றாம் உலக கட்டுமான செயற்பாடுகள் காரணமாக இடதுசாரி சக்திகளும் இவரை ஆராதித்தன. அந்த வகையில் கமுனிஸ்ட் கார்த்திகேசு ஆசிரியர் . வீ. பொன்னம்பலம் போன்ற தமிழ் இடதுசாரிகளும் இவரை பற்றி சிலாகித்து பேசியுள்ளனர். உலக இஸ்லாமிய அழைப்பு சமூகம் என்று கடாபி லிபியாவில் உருவாக்கிய ஒரு நிறுவனம் எவ்வாறு இலங்கையில் செயற்பட்டது. மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரப் , இன்றைய தலைவர் ஹக்கீம் ஆகியோரின் தொடர்புகளுடன் உள்ள சம்பவங்களுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை….sbazeer@yahoo.co.uk

http://bazeer-lanka.blogspot.com

வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!
“ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” 2009

ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை என்பதறியலாம். என்ன, இந்த நகைச்சுவையை பார்த்து யாரும் வாய்விட்டு சிரிக்க முடியாது என்பதுதான் சோகம்.

வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விடயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் நவரசத்தில் வைகோதான் சோகத்தின் நாயகனோ?

சில வருடங்களுக்கு முன்பு அநேகமாக 2007 என்று நினைவு. சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம். நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முகமன் சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இனி அவர்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் என்றும் சொன்னார். ஆனால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அந்த வரைக்கும் கொஞ்சம் அடக்கம் இருந்தது உண்மை.

அப்போதே யோசித்தேன். இந்த வனவாசம் இன்னும் 20,25,50 ஆண்டுகள் என்று போனால் நாஞ்சில் சம்பத் வாயில் உலக வரலாறும், உலக கட்டிடங்களும் என்ன பாடுபடும் என்று நினைத்தேன். அதனால்தான் வைகோவின் விசயத்தில் சோகமல்ல, நகைச்சுவையே மேலோங்கி இருக்கிறது என்று மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.

வைகோ குறித்து நடுநிலைமையாளர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. “அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்” என்று அவரை போற்றுகிறார்கள். வைகோவின் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமரிசப்பவர்கள்கூட இந்த விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள். எனினும் இது மிகவும் பிழையான சென்டிமெண்டான மதிப்பீடு என்கிறோம். ஒருவேளை சென்டிமெண்டாக உணர்ச்சிவசப்பட்டு, படுத்தி பேசும் வைகோ குறித்து இப்படித்தான் எண்ணுவார்களோ தெரியாது.

சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை ம.தி.மு.க வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றமில்லை என்றாலும் வைகோவிற்கு இரட்டை இலக்கில் இடங்கள் கிடைக்காது என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 41, சி.பி.எம்முக்கு 12, சி.பி.ஐக்கு 10 பிறகு சின்ன கட்சிகளுக்கு ஒரிரு இடங்களெல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ம.தி.மு.கவின் இடம் குறித்து மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தே.மு.க.தி.க வந்திருப்பதால் அதிக இடம் கொடுக்க முடியாது என்கிறது அ.தி.மு.க. வைகோ இதை உணராமல் இல்லை. எனினும் அவர் 25இல் ஆரம்பித்து 20இல் நின்று இறுதியாக 15வது கொடுங்கள் என்கிறாராம். அம்மாவோ 5இல் ஆரம்பித்து 7,8 என்று நிற்பதாக தகவல். இதனால்தான் புரட்சிப் புயல், புரட்சித் தலைவியை பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாமல் அண்ணாநகர் வீட்டில் முடங்கி கிடக்கிறது.

ஆனாலும் நண்பர்களே இந்தக்காட்சி இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இரு வருடங்களுக்கு முன்னர் கூட அட்சர சுத்தமாக இப்படித்தான் நடந்தது. அதை கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கில் சென்று பார்ப்போம்.

2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் ம.தி.மு.கவைத் தவிர மற்ற கட்சிகள் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தன. அவர்களுக்குரிய தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டாலும் வைகோவுக்கு ஒதுக்கீடு முடியவில்லை. அ.தி.மு.க நான்கு தருவதாக சொன்னது. வைகோ கராராக ஆறு என்று கேட்டார். அப்போதும் இதே நிலைதான். சோகம்தான்.

அப்போது ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தென்மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவர்கள் ஈழத்தமிழருக்காக சென்னையில் வந்து போராடுவதற்கு இரயிலில் வந்தனர். அவர்களை வரவேற்க வைகோ நிலையம் சென்றார். “ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” என்று மாணவர்கள் முழக்கமிட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த வைகோ செய்வதறியாது திரும்பினார். வெளியே நிருபர்கள் இன்னமும் தொகுதி உடன்பாடு முடியாதது குறித்து கேட்டார்கள். ” அது குறித்து பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று வைகோ வெருட்டென்று போய்விட்டார்.

இந்த மனநிலை ஈழத்தின் சோகத்தினால் வந்ததென்று நீங்கள் தவறாக கருதிவிடக்கூடாது. உண்மையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த வருத்தம்.

ஒரு வழியாக ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் விருதுநகர், தஞ்சை, நீலகிரி, ஈரோடு முடிவாகி வைகோவும் சிரிக்காத முகத்துடன் உம்மென்று ஜெயா அருகில் போஸ் கொடுத்து ஒப்பந்தத்தை காட்டினார். இந்த தொகுதிகளெல்லாம் அ.தி.மு.கவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதது என்பதால் இதில் வெல்ல முடியாதென்பது வைகோவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?

அப்போதும் ஏன் இப்போதும் கூட அவர் தனியாக தேர்தலில் நின்று பார்க்க முடியாது. அத்தகைய வெற்று சவடால் அடிப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை.

ஆனால் அப்படி தனியாக வென்று காட்டுவதற்கென்றுதான் கட்சி ஆரம்பித்தார்.

1944-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.

தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.

தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.

மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்பது தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.

உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.

அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.

அந்த வகையில் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசியல் செய்யும் தலைவராக கூட அவர் இருந்ததில்லை. தி.மு.கவை வேறு வழியின்றி அந்த எதிர்ப்பு அலை ஆட்சியில் அமர்த்தியது.

இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.

பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.

தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.

இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.

ஈழப் பிரச்சினையில் கூட வைகோ எப்போதும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாதித்து விடலாம் என்ற அணுகுமுறையையே கொண்டிருந்தார். ஒரு சில லாபி வேலைகள் செய்தால் ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பதுதான் அவரது நிலை. முக்கியமாக இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக ஈழப்பிரச்சினைக்கு வில்லனாக இருக்கிறது என்ற முறையில் அவரது அணுகுமுறை என்றும் இருந்ததில்லை.

மேலும் 2009ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை முன்னணிக்கு வந்த போதும் அதை வைத்து மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதில் அதை தேர்தல் முழக்கமாக்கி ஆதாயம் அடைய நினைத்தார். அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வென்றுவிட்டால் ஈழப்போர் முடிவுக்கு வரும் என்று புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவறாக வழிநடத்தியதில் வைகோவுக்கும் பெரும் பங்குண்டு.

முத்துக்குமார் இறந்த பிரச்சினையிலும் அது பெரிய போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக அணிமாறிய வைகோ இந்த தேர்தலில் கிட்டத்தட்ட27 சீட்டுகள் கிடைக்காது என்றாலும் அணிமாற இயலாது என்ற இழிவான நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதில் ஆறு சதவீதம் வாக்குகளும், இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தால்தான் மாநிலக் கட்சி என்ற தேர்தல் க மிஷன் அங்கீகாரம் கிடைக்கும். சென்ற தேர்தலில் பறி போன அந்த அங்கீகாரம் இனி எப்போதும் திரும்பாது என்பதுதான் களநிலவரம். மக்கள் நலன் என்ற அங்கீகாரத்திற்கு துரோகமிழைத்தவருக்கு இந்த டெக்னிக்கல் அங்கீகாரம்தான் தற்போது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாம். எனினும் அவர் இதையும் கடந்து வருவார்.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோவின் இலக்குதான் என்ன? அவர் தமிழகத்தில் ஒரு தலைவராக உலா வர வேண்டும். ஊடகங்களில் அவரது கருப்பு மையடித்த மீசை கொண்ட படங்கள் வெளிவர வேண்டும். அவரது அறிக்கைகள் தினசரிகளில் இடம்பெறவேண்டும். சமீபத்தில் கூட உலக மகளிர் தினம், ஜப்பான் சுனாமி குறித்தெல்லாம் அறிக்கை வெளியிட்டார். அதே நேரம் உள்ளுக்குள் அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றை எண் தொகுதிகள்தானா என்று அவர் கொஞ்சமேனும் அழுதிருக்க வேண்டும்.

இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.

மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது இன்று அவர் அரசியல் அனாதையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கும் நாம் வருந்தத் தேவையில்லை. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் எல்லா வகை சீரழிவுகளோடும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவர்களது நிழலில் தங்கி வேலை செய்த வைகோ அவர்களது செல்வாக்கை மிஞ்ச முடியுமா என்ன?

ஆக இந்த இடம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் புறநிலையான காரணங்களும், அகநிலையான காரணங்களும் உண்டு. அதில் வைகோ விரும்பி செய்த பணிகளையே மேலே விமரிசித்திருக்கிறோம். ஆக வைகோ வாய்ப்பு கிடைக்காததால் ஒருபெரிய தலைவராக முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ம.தி.மு.க கட்சியில் சேரும் தகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அதாவது அவரும் அரசியல் அனாதையாக முடிவு செய்து விட்டார். நாமும் நமது அனுதாபங்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.

நன்றி: வினவு

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? பகுதி11
தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?

“தமிழர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே சிங்களவன் அடிக்கிறான். புலம்பெயர்ந்த தமிழர்கள், பைபிளையும், சிலுவைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தால், மேற்குலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்.” “இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் போட்டுள்ள பாதுகாப்பு வலையம் தான் இஸ்ரேலின் பலம். ஈழத்தமிழர்களும் கிறிஸ்தவ நாடுகளை நண்பர்களாக்கிக் கொண்டால், அவர்களது இலட்சியத்தில் வெற்றி பெறலாம். முக்கியமாக சிறிலங்கா படைகள் குண்டு போட்டு அழித்த தேவாலயங்களின் படங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களை, பௌத்த-சிங்கள அரசு படுகொலை செய்கின்றது என்ற பிரச்சாரம், மேலைத்தேய கிறிஸ்தவர்களின் அனுதாபத்தை தேடித்தரும்.”- ஒரு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளரின் ஆலோசனை.மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அந்தக் கருத்துக்கள் வேடிக்கையாகத் தோன்றலாம். தமிழர்களில் பெரும்பான்மையோரான இந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கலாம். சில முற்போக்கு தமிழ் தேசியவாதிகள், மதவாதம் தமிழ் தேசியத்தை உடைத்து விடும், என்று கவலைப்படலாம். தமிழீழத்தை இன்னொரு இஸ்ரேலாக்கும் கருத்தியல், எழுபதுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக வலதுசாரி தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள், அதனை பகிரங்கமாக தேர்தல் மேடைகளில் பேசினார்கள். தமிழீழத்தை ஆசியாவின் இஸ்ரேலாக்குவோம், என்று பெருமையாக முழங்கினார்கள். அவர்கள் உதாரணம் காட்டிய இன்னொரு நாடு சிங்கப்பூர்.

சாமானியன் கூட தமிழீழம் என்றால், இன்னொரு இஸ்ரேலாக, இன்னொரு சிங்கப்பூராக கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினான். தமிழர்கள், யூதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்ட காலமும் அது தான். இன்று வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருகி விட்டார்கள். அன்று, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே சிறு தொகை படித்த ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அதனால், மலேசியா, சிங்கப்பூர், பிஜி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்த தமிழர்களை, புலம்பெயர்ந்த தமிழர்களாக காட்டினார்கள். “தமிழன் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றான். தமிழர்களுக்கு என்றொரு நாடில்லை.” என்று அவர்களைத் தான் உதாரணமாக காட்டினார்கள். அன்று தமிழீழம் உருவானால், அது உலகத் தமிழர்களின் தாயகமாக இருக்கும் என்றார்கள். அதாவது இன்று இஸ்ரேல் உலக யூதர்களின் தாயகமாக இருப்பதைப் போல. (ஒரு யூதர் உலகின் எந்த மூலையில் இருந்து சென்றாலும் இஸ்ரேலிய பிரஜை ஆகலாம்.)

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு காரணம் இருந்தது. “தமிழர்கள் உலகிலேயே புத்திசாலிகள்” என்ற இன மேலாண்மைக் கருத்தியல். அதற்காக எல்லா தமிழர்களும் புத்திசாலிகள் என்று தவறாக கருதி விடக்கூடாது. யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே உலகிற் சிறந்த மூளைசாலிகள். “எலிசபெத் மகாராணிக்கு கணிதப் பாடம் படிப்பித்த தமிழன் கதை”, யாழ்ப்பாண தமிழரின் அதி சிறந்த புத்திசாதுர்யத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. இப்போதும் பல யாழ்ப்பாண தமிழர்கள், பிற மாவட்ட தமிழர்களை விட, சிங்களவர்களை விட, முஸ்லிம்களை விட, தாம் உயர்ந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். தற்போது யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி பேசும் போது கூட:”ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரைக்கு இந்த நிலைமையா?” என்று தான் ஆதங்கப் படுகின்றனர். (அடிமைப் பரம்பரையாக இருந்த தலித் மக்களும் தமிழர்கள் தான்.) மேற்குறிப்பிட்ட சமூகப் பின்னணி அவர்களை, யூதர்களுடன் மட்டுமே தம்மை ஒப்பிடத் தூண்டியது. ஏனெனில் உலகில் யூதர்கள் மட்டுமே அதி புத்திசாலிகள், அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் (யாழ்ப்பாண) தமிழர்கள் உலகிற் சிறந்த மூளைசாலிகள்.

“யூதர்களும் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக இருந்தவர்கள். உலகம் முழுக்க அகதியாக அலைந்தார்கள். இப்போது இஸ்ரேல் என்ற தேசத்தை ஆள்கிறார்கள். யூதரின் வரலாற்றுடன் ஒப்பிட்டு, ஆண்ட தமிழினத்தின் கதையை தமிழர்கள் வாழையடி வாழையாக தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து வர வேண்டும்.” வருங்காலத் தமிழீழமும் இஸ்ரேலைப் போன்று அமெரிக்க அடியாளாக செயற்பட வேண்டுமென்றால், அதையிட்டு அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக அது ஒரு பெருமைக்குரிய விடயம். அமெரிக்காவின் ஆப்கான், ஈராக் படையெடுப்புகள், அல்கைதா எதிர்ப்பு போர், எல்லாவற்றையும் ஆதரிப்பார்கள். அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறது என்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். வியட்னாம் போர் நடந்த காலத்தில், அமெரிக்கா கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்று அகமகிழ்ந்தார்கள். இஸ்ரேல்- அமெரிக்க ஆதரவை, யாழ்ப்பாண சமூகப் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சைவ-கிறிஸ்தவ வெள்ளாள ஆதிக்கவாதிகள், முஸ்லிம்களை எதிரி இனமாக கருதினார்கள். அதே நேரம், கம்யூனிஸ்ட்கள் நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டத்தையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட சாதிகள் சம உரிமை கேட்டால், ஆண்ட பரம்பரைக்கே ஆபத்தாகி விடும்.

யூதர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்கள், “உலகில் அதிகமான நோபல் பரிசுகளை வென்றவர்கள் யூதர்கள்.” என்று விஞ்ஞானபூர்வமாக தர்க்கம் செய்வார்கள். மேலைத்தேய நாடுகளிலும், யூத ஆதரவு அரசியல்வாதிகளால் இத்தகைய பிரச்சாரம் பல வருடங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. கணிசமான யூதர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நூறு வருடங்களுக்கு மேலாக பலதரப்பட்ட சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருக்கிறது நோபல் நிறுவனம். இது வரை வழங்கப்பட்ட பரிசுகளில் 18 வீதமானவை, யூத இனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளன.

உலக சனத்தொகையில் ௦௦௦0.3% மாக உள்ள யூதர்களுடன் ஒப்பிடும் போது இது அதிகம் தான். ஆயினும் பரிசு வாங்கிய இஸ்ரேலிய யூதர்கள் மிக மிகக் குறைவு என்பது ஆர்வத்தை தூண்டும் விடயம். அநேகமாக நோபல் பரிசு பெற்ற யூத சாதனையாளர்கள், ஒன்றில் ஐரோப்பாவில் வாழ்ந்திருப்பார்கள், அல்லது சிறிது காலமாவது அமெரிக்காவில் படித்திருப்பார்கள். திறமைசாலிகளின் சுதந்திரத்தில் தலையிடாத, அவர்களை ஊக்குவிக்கும் மேற்கத்திய சமூகத்தில் வாழ்ந்த யூதர்கள் மட்டுமே சாதிக்க முடிந்துள்ளது. (சோவியத் யூனியன் போன்ற சோஷலிச நாடுகளிலும் அத்தைய சுதந்திரம் இருந்தது.) இலங்கை, இந்தியா போன்ற பழமைவாத கலாச்சாரம் பேணும் சமூகங்களில் தனி மனித சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. பழமைவாத யூத குடும்பங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மேற்கொண்டு ஆராய விரும்புவோர், நோபல் பரிசு வென்ற யூதர்களின் சுயசரிதையை வாசித்துப் பார்க்கலாம். அவர்கள் எல்லோரும் பழமைவாத மதக் கட்டுப்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்கள். மதச்சார்பற்ற கல்வி கற்றவர்கள். நாசிஸ சர்வாதிகார ஆட்சியின் பயனாக பல ஐரோப்பிய யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தனர். அங்கே கிடைத்த வரவேற்பு, வசதி, வாய்ப்புகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

நோபல் பரிசுகள் யாவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்காக வழங்கப்படும் நோபல் பரிசு சர்வதேச அரசியலில் கலகத்தை தோற்றுவிக்கும். உண்மையிலேயே சமாதானத்திற்காக பாடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். எதிரிகளாலும் மதிக்கப்பட்ட மாமனிதர். அவருக்கு சேர வேண்டிய நோபல் பரிசு, நீண்ட காலமாக கொடுக்கப்படாமல் இழுபறிப்பட்டது. அதற்கு முன்பே போர்வெறியன் புஷ்ஷுக்கு சமாதான பரிசு கொடுத்து விட்டார்கள். இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் மெனாகேம் பெகின், இட்சாக் ராபின், ஷிமோன் பெரேஸ் ஆகிய யூதர்களுக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. யார் இவர்கள்? இஸ்ரேலை ஆண்ட காலங்களில் போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். மெனாகேம் பெகின் ஒரு பயங்கரவாதி என்று பிரிட்டிஷ் அரசே அறிவித்திருந்தது. மற்ற இருவரும் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்கள். ஒரு வேளை மகிந்த ராஜபக்சவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், தமிழர்கள் எந்தளவு கொதித்தெழுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நோபல் பரிசின் யோக்கியதை அந்தளவுக்கு தான் உள்ளது.

(தொடரும்)

கலையகம்:

எங்கே நமது தாயகம்? புலம் பற்றிய ஓர் ஆய்வுத்தொடர் 4
சர்வே தர்மா

நாம் வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகங்களா?

கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட இலையுதிர்த்த மரங்கள் தொடர்பான தாயகப் படிமம் தொடர்பாக நண்பர் ஒருவர் தனது அனுபவத்தைத் தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

அது எனது நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு உரையாடல்.

நண்பரது மனைவி ஒப்பீட்டளவில் அண்மையில்தான் புலம் நோக்கி பெயர்ந்திருந்தவர். நண்பர் இருபது வருடங்களுக்கு முன் தனது இளைய வயதில் புலத்தில் காலடி வைத்தவர்.

சில வாரங்களுக்கு முன்னர் நண்பரும் அவரது மனைவியாரும் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் இலையுதிர்த்து நின்ற மரங்களைப் பார்த்து ‘இது என்ன சுடலை மரங்கள் மாதிரிக் கிடக்குது’ என்று கூறிச் சலித்திருக்கிறார்.

அப்போது நண்பர் கூறியிருக்கிறார். ‘எங்களுக்கு இது சுடலை மரம் மாதிரித் தெரியுது. இங்கு பிறந்து வளர்பவர்களுக்கு இது இயற்கையின் ஒரு வடிவம்’.

நண்பரின் மனைவிக்கூடாகவும் இலையுதிர்த்த மரங்களைப் பற்றிய நமது ஊர்ப்படிமம் ஒன்று வெளிவந்திருக்கிறது.

இத்தகைய ஊரின் நினைவுகள், பழக்க வழக்கங்கள் போன்றவை நாம் புலம் பெயர்ந்த பின்னர் முதலாம் தலைமுறையினரின் புலத்து வாழ்க்கையில் பெரும் தாக்கத்தினையும் செல்வாக்கினையும் செலுத்தி வருவதனையும், இதனோடு இணைந்த வகையில் diaspora என்ற எண்ணக்கருவுக்கு அறிஞர்கள் கொடுத்து வரும் விளக்கங்களையும் நாம் இக் கட்டுரைத் தொடரில் தற்போது நோக்கி வருகிறோம்.

ஊரில் நாம் வாழ்ந்த நமது வாழ்க்கை முறையுடன், நாம் வாழ்ந்து வந்த இயற்கையுடன் மாறுபட்ட முறையில் வாழ்க்கையினை புலத்தில் ஆரம்பிக்கும்போது ஊரின் நினைவுகளும் தாக்கங்களும் அதிகமாகவிருப்பது இயல்பானது.

புலம் நமக்கு வாழ்வதற்கு எவ்வகையிலும் பொருத்தம் இல்லாத இடமாக நாம் கருதிக் கொண்டதும் உண்டு.

கவிஞர் ஜெயபாலன் புலம் நோக்கிப் பெயர்ந்து, நோர்வேயில் வாழ்ந்த ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய கவிதை ஒன்று புலப்பெயர்வை குடும்பத்துப் படிமத்தின் ஊடாகச் சொல்லும். இக் கவிதையின் வரியொன்று இப்படித்தான் அமையும்.

‘…..நானோ

வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஓட்டகம் போல்

ஒஸ்லோவில்….’

பனிமண்டலமான அலாஸ்காவில் பாலைவன மிருகமான ஒட்டகம் வந்திறங்கி விட்டால் இசைவாக்கம் அடைவதில் அதற்குள்ள கடினங்கள் போல- புலத்துப் புதிய வாழ்க்கை மற்றும் இயற்கைச் சூழலுக்கு இசைவாக்கம் அடைவதில் உள்ள, புதிதாய் நமது தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் யெர்ந்தவர்களுக்குள்ள கடினநிலையினை இக் கவிதை வரிகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

இக் கவிதை வரிகளை அடிப்படையாகக் கொண்டு ‘அலாஸ்காவின் ஒட்டகங்கள்’ என்ற திரை நாடகம் ஒஸ்லோவில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

புலத்து வாழ்க்கையில் தமது வாழ்க்கையினை அமைப்பதில் முதலாம் தலைமுறையினருக்கு ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை இத் திரைநாடகம் கருப்பொருளாகக் கொண்டிருந்தது.

தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தபோதும் இந் நாடகம் எடுத்துக் கொண்ட கருவும் கதைக்களமும் நமது புலத்து வாழ்க்கை பற்றி முக்கியமானதொரு பேசுபொருளாக அப்போது கருதப்பட்டது.

இதேபோல் புலத்தில் வெளிவந்த சில திரைப்படங்களும், குறும்படங்களும் புலத்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தன.

பாரிஸில் இருந்து வெளியாகிய அருந்ததியின் முகம் திரைப்படம் இவற்றில் முக்கியமானதொன்றாகக் கருதப்பட்டது.

இதேபோல் கலை இலக்கியத் தளத்திலும் புலத்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பதிவாகியுள்ளன. புலம் பெயர் இலக்கியமும் இப்போது தமிழ் இலக்கியப் பரப்பில் கவனத்தைப் பெற்றுள்ளது. இவை தொடர்பான ஆய்வுகளும் இடம் பெற்று வருகின்றன.

நமது புலத்து வாழ்க்கையின் கலை இலக்கிய முயற்சிகள் பற்றி இக் கட்டுரைத் தொடரில் நாம் பின்னர் நோக்குவோம்.

ஜெயபாலனின் கவிதை வரிகளில் குறிப்பிட்டவாறு புலத்து வாழ்க்கைக்கு நம்மை இசைவாக்க முடியாமல் அல்லது இசைவாக்க விரும்பாமல் மீண்டும் தாயகம் நோக்கி இயன்றவரை விரைவாகத் திரும்ப வேண்டும் என்று நம்மில் பலர் ஆரம்பத்தில் எண்ணிக் கொண்டதும் உண்டு.

ஆனால் நாளடைவில் இவ் வாழ்க்கைக்கு நாம் இசைவாக்கம் அடையத் தொடங்கி விட்டோம் அல்லது ‘சமாளித்துப்’ பழகி விட்டோம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நான் கடந்த கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டவாறு ஊருக்குத் திரும்பிச் செல்லும் விரும்பம் நம்மவரிடையே குறைந்து வருவதனை நாம் அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகக் குறிப்பிட்டதும் இதன் வெளிப்பாடாக இருக்கலாம்.

புலத்தில் வாழ்வதற்காக நாம் இப்போது பனிமண்டலங்களில் ஒட்டகங்கள் வாழும் வித்தையினை நன்கு கற்று வருகிறோம் போலத் தெரிகிறது.

இதற்கு நாம் கடைப்படிக்கும் ஓர் உத்தி நமது ஊரை, நாம் வாழ்ந்து வந்த தாயகச் சூழலை இங்கு வாழும் நாடுகளில் உருவாக்கிக் கொள்வது.

இது நாம் மட்டுமல்ல, தமது தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்த பல்வேறு சமூகங்களும் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறைதான்.

புலம் பெயர்ந்த நாடுகளின் இயற்கையில் நம்மால் இலகுவில் மாற்றங்களைச் செய்ய முடியாவிட்டாலும் நாம் வாழும் வீட்டுச் சூழலில், சமூகச் சூழலில் நாம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்.

இம் மாற்றங்கள் பல்வேறு வகையிலும் நாம் நமது தாயகத்தில் வாழ்ந்த வாழ்க்கையுடன் தொடர்புபட்டதாக இருக்கிறது. வீட்டின் உள்வடிவமைப்பில் நாம் நமது பண்பாட்டுச் சூழலை, தாயகச் சூழலைக் கொண்டு வருகிறோம்.

எங்கள் பல வீடுகளில் நாம் சுவாமி அறைகளை உருவாக்கியிருக்கிறோம். வீடுகளில் நாம் அலங்காரத்துக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களும் தமது பண்பாட்டை, நாம் பிறந்து வளர்ந்த தாயகச் சூழலை பிரதிபலிப்பவையாக அமைகின்றன.

நாம் வாழும் நாடுகளின் சமூகச் சூழலுக்குள்ளும் நாம் தாயகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒத்த ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்ள முனைகிறோம்.

இதில் முக்கியமான இடங்களை வகிப்பவை மூன்று வகையான நிறுவனங்கள். முதலாவது கோவில்கள். இரண்டாவது தமிழ்ப் பாடசாலைகள். மூன்றாவது நடனம், இசை போன்றவை கற்பதற்கான கலைக்கூடங்கள்.

இவற்றை விடவும் தாயகச் சூழலை இங்கு கொண்டு வருவதற்கு நாம் விளையாட்டுத் தளத்தினைப் பயன்படுத்துகிறோம்.

நம்மில் பலருக்கு பனிச்சறுக்கு விளையாட்டைப் பழகுவதைவிட, கிளித்தட்டை இங்கு விளையாடுவதில் விருப்பம் அதிகம்.

கிரிக்கட் விளையாட்டை தமது விளையாட்டுத் தளத்தில் கொண்டிராத நாடுகளில்கூட கிரிக்கட் விளையாட்டில் ஊறிப்போன புலம் பெயர்ந்தவர்களால் கிரிக்கட் அறிமுகம் செய்யப்பட்டு முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது.

உதாரணமாக நோர்வேயில் கிரிக்கட் விளையாட்டில் பாகிஸ்தானியர்களும் தமிழர்களும் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார்கள். கிரிக்கட் விளையாடும் பாகிஸ்தானியர்களை மையமாகக் கொண்டு அண்மையில் ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் ஒரு கலாநிதி ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

எனது ஆய்வில் நாம் தாயகத்தில் பின்பற்றிய பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை புலத்தில் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நோக்கியிருந்தேன்.

இதற்கு நான் ஆய்வுக்காகச் செவ்வி கண்டவர்களிடம் நாம் தாயகத்தில் பின்பற்றிய பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை ஏன் புலத்திலும் பின்பற்றுகிறோம்? எவ்வகையில் நமக்கு இப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன? என்ற கேள்விகளையும் கேட்டிருந்தேன்.

இப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதற்கு – நமக்கு பரீட்சயமானவை, நம்மோடு இணைந்து விட்டவை – இதனால் நாம் எங்கு சென்றாலும் இவை நம்முடன் சேர்ந்து வருவவை, நமது அடையாளத்தின் முக்கியமான ஒரு பகுதி இவை, புலத்து வாழ்வில் நமக்கு மகிழ்வையும் ஆறுதலையும் தருபவை, ஊரில் வாழ்வது போன்ற எண்ணத்தைத் தருவதால் ஊர் ஏக்கத்தினைக் குறைவடையச் செய்பவை, நமது இரண்டாம் தலைமுறையினரை நம்மவர்களாக வளர்க்க உதவுபவை, ஊரில் உள்ள உறவுகளின் எதிர்பார்ப்புக்கு இசைவாக மேற்கொள்ளப்படுவவை – போன்ற பல்வேறு காரணங்களை இவர்கள் தமது அனுபவத்தின் ஊடாக வெளிப்படுத்தினார்கள்.

இப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் நம்மவர்கள் புலத்தில் தமது வாழ்க்கையினை ஒரு சமநிலையுடன் அமைத்துக் கொள்வதில் முக்கிய பாத்திரத்தினை வகிப்பதாகவே உணர முடிந்தது.

நாம் புலத்தில் நமது தாயகத்தை உருவாக்கிக் கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக நாடு கடந்த சமூகங்கள் (Transnational communities) குறித்து சமூக அறிஞர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் அம்சங்களை நோக்கும்போது மேலும் பேசலாம்.

நாம் டயாஸ்பொறா என்ற எண்ணுக்கருவினை William Safran, Robin Cohen ஆகியோர் வரையறை செய்த அணுகுமுறையினை கடந்த இரு கட்டுரைகளில் நோக்கியிருந்தோம்.

இவர்கள் டயாஸ்பொறா என்ற எண்ணக்கருவினை சில குறிப்பிட்ட குணாம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறுத்தும் வகைப்படுத்தியும் இருந்தனர்.

இந்த அணுகுமுறையுடன் சில அறிஞர்கள் ஒத்துப்போகவில்லை. இவர்களில்; ஒருவர் James Clifford எனும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர். இவர் பல்துறைகள் சார்ந்தும் தனது ஆய்வுகளை மேற்கொண்டதுடன் தனது ஆய்வுகளின் அடிப்படையில்; பலராலும் பண்பாட்டு மானுடவியலாளராகவும் (Cultural Antropologist) நோக்கப்படுபவர்.

1994 ஆண்டு இவர் Diasporas எனும் ஆய்வுக் கட்டுரையினை வெளியிட்டிருந்தார். இக் கட்டுரை வெளியாகும்போது Robin Cohen இன் Global Diasporas: An Introduction எனும் நூல் வெளியாகியிருக்கவில்லை.

Clifford தனது வாதங்களை முன்வைக்கும்போது William Safran இன் வாதங்களை கவனத்துக்கெடுத்து மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கிறார். இவரது இக் கட்டுரை ஆய்வாளர்கள் பலராலும் கவனத்துக்கெடுத்துக் கொள்ளப்படும் கட்டுரையாக இன்றும் உள்ளது.

இன்றைய கட்டுரைத் தொடரில் James Clifford முன்வைத்த Diaspora தொடர்பான வாதங்களை கவனத்துக்கெடுப்பதே முதலில் எனது நோக்கமாக இருந்தது.

இருந்தபோதும் 05.02.2011 சனிக்கிழமையன்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன் (David Cameron) ஜேர்மனியில் பேசிய பேச்சொன்று கூடுதல் கவனத்தை ஈர்த்தது.

நாம் இத் தொடர்கட்டுரையில் பேசும், பேசவுள்ள விடயங்களுக்கு இப் பேச்சு முக்கியமானதென நான் உணர்ந்தமையால் இப் பேச்சுக் குறித்து சில விடயங்களை இன்றைய கட்டுரையில் நோக்க ஆரம்பிப்பது நல்லது என்று கருதுகிறேன்.

David Cameron தனது பேச்சில், பிரித்தானியாவில் பண்பாட்டுப் பன்மைத்துவம் (Multiculturalim) தோல்வியடைந்து விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல முழு ஐரோப்பாவுக்கும் முக்கியமானதொரு கூற்றாகும்.

புலம்பெயர்ந்தவர்களை – இந் நாடுகளின் பார்வையில் வெளிநாட்டவர்களை – தங்கள் நாடுகளில், தமது சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு வெவ்வேறு வகையான கொள்கை அணுமுறைகளை வெளிநாட்டவர்களை உள்வாங்கும் நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.

Assimilation,  Multiculturalism, Integration, Exclusion எனும் வெவ்வேறு எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு இக் கொள்கை அணுகுமுறைகள் மாறுபடுகின்றன.

நாடுகளுக்கிடையேயும் வெளிநாட்டவரைத் தமது சமூகத்துடன் இணைத்துக் கொள்வது தொடர்பாக எத்தகைய அணுகுமுறையினைப் பின்பற்றுவது என்பதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

Assimilation என்பது இதன் ஆரம்ப அர்த்தத்தில் தாம் வாழும் சமூகத்தடன் புதிதாக வந்தவர்களை கரையப் பண்ணி, ஒரு பொது அடையாளம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட Melting pot உருவகம் இதன் அடிப்படையில் அமைந்ததுதான். ஆனால் இந்த அணுகுமுறை இதன் ஆரம்ப அர்த்தத்தில் வெற்றியடையவில்லை. இதனால் இதற்குப் புதிய அர்த்தம் கொடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

Rodgers Brubaker எனும் அறிஞர் ’Return to Assimilation?’ எனும் தனது ஆய்வுக் கட்டுரையில் இப் புதிய அர்த்தம் பற்றி விவாதித்துள்ளார். இதனை இக் கட்டுரைத்தொடரில் பின்னர் நாம் நோக்குவோம்.

இந்த Assimilation என்ற எண்ணக்கருவுக்கு மாற்றீடாக உதித்ததுதான் Multiculturalism எனும் நிலைப்பாடு. பண்பாட்டின் அடிப்படையில் மக்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணிக் கொள்ளவும், இத் தனித்துவம் மக்களின் கூட்டுரிமையின் பாற்பட்டதாக அமைவதற்குரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் இந் நிலைப்பாட்டின் பாற்பட்டு விவாதிக்கப்பட்டது.

பண்பாட்டு பன்மைத்துவம் தொடர்பாக, முழுமையாக இல்லாவிட்டாலும்கூட, கனடா உத்தியோகபூர்வமாக Multiculturalism கொள்கையினைக் கடைப்பிடிக்கும் நாடாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பாவில் பிரித்தானியாவே Multiculturalism கொள்கைக்கு நெருக்கமான நாடாகக் கருதப்பட்டது.

Integration என்பது Assimilation என்பதற்கும் Multiculturalism என்பதற்கும் இடையில், இவ்விரு நிலைகளிலும் இருந்தும் சில அம்சங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும் ஒரு வகையான இணைந்த வாழ்வுக்கான ஏற்பாடாகும். எத்தகைய முறையில் இவ் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவது என்பதும் நாடுகளுக்கு நாடு வித்தியாசப்படுகிறது.

Exclusion  என்பது வெளிநாட்டவரை சில விடயங்களில் புறந்தள்ளி, ஒதுக்கி வைத்து நடத்தும் அணுகுமுறையினைக் குறித்து நிற்கிறது.

இவ் வேறுபட்ட அணுகுமுறைகள் தொடர்பாகவும், இதனால் நமது தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளுக்கிடையே கொண்டிருக்கும் வெவ்வேறு வாய்ப்புக்களையும் கடப்பாடுகளையும் பற்றி இக் கட்டுரைத் தொடரில் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.

நாம் மேலே குறிப்பிட்ட இப் பின்னணியில் இருந்து பண்பாட்டுப் பன்மைத்துவம் ஒரு அரச கொள்கையாகத் தோல்வியடைந்து விட்டது என்ற அர்த்தம் தரக்கூடிய வகையில் State Multiculturalism தோல்வியடைந்துள்ளதாகவே கமருன் குறிப்பிடுகிறார்

இதேபோன்று ஜேர்மனியின் Chancellor ஆக விளங்கும் Angelo Merkel உம் ஜேர்மனியில் பண்பாட்டு பன்முகத்துவச் சமூகம் அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துவிட்டது என 2010 ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிப்பிட்டிருந்தார்.

எனது பார்வையில் பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் Multiculturalism எனும் எண்ணுக்கருவின் அர்த்தத்திலும் நடைமுறையிலும் வேறுபாடுகள் உள்ளன.

ஜேர்மனியினை Multiculturalism என்ற கொள்கையினைக் கடைப்பிடித்த நாடாக வகைப்படுத்த முடியாது. ஜேர்மனி Assimilation என்பதனைக் கூடுதலாகவும் தனது தாராளவாத ஜனநாயக அடிப்படையில் (liberal democracy) மத சுதந்திரத்துக்கு இடமளித்த நாடாகவுமே வகைப்படுத்த முடியும்.

பிரித்தானியாவும் தனது liberal democracy என்பதன் அடிப்படையிலேயே பண்பாட்டுப் பன்முகத்துக்கு இடமளித்திருந்தாலும் நடைமுறையில் ஐரோப்பாவில் பண்பாட்டுப் பன்முகத்துக்கு முன்னுதாரணமான நாடாகப் பார்க்கப்படும் நிலை உருவாகி விட்டது.

டேவிட் கமருனின் உரை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் தப்புவதற்கு இஸ்லாமியத் தீவிரவாதக் கருத்துநிலை (ideology) தோற்கடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளை, இஸ்லாம் பிரித்தானிய தாராளவாத ஜனநாயகத்துடன் இணைந்து செல்லக்கூடிய மதம்தான் என்கிறது. இந்த வகையில் இஸ்லாம், இஸ்லாமியத் தீவிரவாதம் இரண்டையும் இரு வேறுபட்ட விடயங்களாகச் சித்தரிக்கிறது.

இஸ்லாமியத் தீவரவாதம் தோற்கடிக்கப்படுவதற்கு தற்போது பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள state multiculturalism அணுகுமுறையில் மாற்றங்கள் வரவேண்டும் என்ற செய்தியினை உட்கிடக்கையாகக் கொண்டதாக அமைந்துள்ளது இவ்வுரை.

டேவிட் கமருனின் உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பிரித்தானியாவின் அரச கொள்கையாகும்போது அது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தைக் கொடுப்பதாக அமையும்.

அவை எத்தயை தாக்கங்களாக அமையலாம்?

(தொடரும்)

டேவிட் கமருனின் உரைக்கான இணைப்பு:

http://www.number10.gov.uk/news/speeches-and-transcripts/2011/02/pms-speech-at-munich-security-conference-60293