மறுஆய்வு WORDPRESS இல் இருந்து .COM க்கு மாற்றம்

Posted in மறுஆய்வு on April 1, 2011 by மறுஆய்வு

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக WWW.MARUAAIVU.WORDPRESS.COM இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் மறுஆய்வு இனி வரும் காலத்தில் WWW.MARUAAIVU.COM இலேயே மறுஆய்வுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மறுஆய்வு.கொம் ( WWW.MARUAAIVU.COM ) இயங்கத்தொடங்கிவிட்டது.

http://www.maruaaivu.com/

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

Posted in கலையகம், தேர்ந்த கட்டுரைகள் on March 28, 2011 by மறுஆய்வு
அமெரிக்க அரசுக்கு தெரிந்த ஒரு உண்மை, பொது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றது. லிபியாவில் இடம்பெற்றது மக்கள் எழுச்சி அல்ல. மாறாக கடாபி அரசுக்கு எதிரான அல்கைதாவின் கிளர்ச்சி. ஏற்கனவே தொன்னூறுகளில் இதே கிழக்கு லிபிய பிரதேசத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய- மத அடிப்படைவாத சக்திகளின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. Read more »

புளாட்டில் நான் பகுதி – 12

Posted in ஆவணம், தமிழரங்கம் on March 28, 2011 by மறுஆய்வு

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும்

தோழர் தங்கராஜாவை எம்மிடமிருந்து பிரித்தனர். அவரை முகாம் பொறுப்பாளர்களுடன் தனியாக களஞ்சியசாலையில் தங்க வைத்தனர். அன்று பகல், பாதி மயக்கத்துடனும் உடல் உபாதைகளுடனும் நாம் எல்லோரும் அவதிப்பட்டோம். இரவானதும், மீண்டும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. Read more »

”நிழல் தேசியத்தலைவர்”ரூட் ரவிக்கு பிரித்தானிய அப்பாவி மாணவனின் மடல்:

Posted in வெளிச்சம் on March 26, 2011 by மறுஆய்வு

தமிழீழ பயணத்தில் பயணிக்க ஆர்வமாய் காத்திருக்கும் என் சந்ததியின் அன்பான வேண்டுகோள்

அன்பின் ரவி அண்ணா ,

உங்களை எனக்கு சிலகாலமாகவே நேரில் கண்டு பழக்கம் என்றாலும் ரூட் ரவி என்று பலகாலமாகவே உங்கள் சேவையை கண்டு , நீங்கள் எனது மடலின் உள்ளார்ந்த வேதனையை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை வரைகிறேன். Read more »

TamilNet இன் 180 பாகை ஊடக தர்மம் – ஒரு மறுஅறிவிப்பு

Posted in மறுஆய்வு on March 24, 2011 by மறுஆய்வு

அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது. Read more »

வைகோவின் எதிர்காலம்?

Posted in தமிழக புதிர், GTN on March 22, 2011 by மறுஆய்வு

- எஸ்.கே. செந்தில்

கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம் அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. Read more »

கடாபி ஹீரோவா அல்லது நீரோவா!

Posted in எஸ்.எம்.எம் பஷீர் on March 20, 2011 by மறுஆய்வு

எஸ்.எம்.எம்.பஷீர்

“நானே மக்கள்,! , கதிரவன் எனது கைச்சட்டைக்குள் ஒரு ரோஜா, நாளின் தீக்குதிரைகள் எனது குருதியில் பாய்ந்து செல்ல, எனது பிள்ளைகள் அடக்குமுறையாளனை தோல்வியுறச் செய்வர் எனது வழியை யார் தடுக்க முடியும்” ( அஹ்மத் புவார்ட் நிம் )- எகித்திய மக்கள் எழுச்சியின் போது பாடிய அஹ்மத் புவார்ட் நிம் எனும் வயோதிப கவிஞனின் பாடலில் ஒரு பகுதி Read more »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 35 other followers